
பிக் சேவிங் டேஸ் 2023; இந்த போன்களுக்கு செம்ம ஆஃபரை வழங்கும் பிளிப்கார்ட்
செய்தி முன்னோட்டம்
பிக் சேவிங் டேஸ் 2023; இந்த போன்களுக்கு செம்ம ஆஃபரை வழங்கும் பிளிப்கார்ட்
ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் நிறுவனம் விரைவில் பிக் சேவிங் டேஸ் 2023 விற்பனையை தொடங்க உள்ளது.
இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் பணத்தை சேமிக்கும் விதமாக அட்டகாசமான தள்ளுபடிகளை அறிவிக்க உள்ளது.
அதன்படி, ஜனவரி 15 முதல் தொடங்கி ஜனவரி 20 ஆம் தேதி வரை பிக் சேவிங் டேஸ் சேல் செயல்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், ஐசிஐசிஐ மற்றும் சிட்டி வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும் எனவும் கூறியுள்ளது.
பிளிப்கார்ட்
பிக் சேவிங் டேஸ்ஸில் ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி
Nothing Phone (1)
நத்திங் ஃபோனை இந்த பிக் சேவிங் சலுகையில், ரூ. 24,999 விலையில் வாங்க முடியுமாம்.
இந்த மொபைலின் விலை ரூ.29,999. ஆனால் விற்பனையில் ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கிறது.
ஐபோன் 14
பிக் சேவிங் டேஸ் விற்பனையில், ஐபோன் 14 சீரிஸுக்கும் பெரிய தள்ளுபடி கிடைக்கும்.
அதாவது, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகியவற்றை இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தள்ளுபடியில் வாங்க முடியுமாம்.
Samsung Galaxy Z Flip 3
அடுத்ததாக,பிக் சேவிங் டேஸ் சேலில், சாம்சங்கின் மடிக்கக்கூடிய போன் ஆன Samsung Galaxy Z Flip 3-ல் மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது.
இது மட்டுமின்றி பல போன்களுக்கு ஆஃபர்கள் உள்ளது.