முதலில் தாலி கட்டிவிட்டு, நிதானமாக கடன் கட்டலாம் - திருமணக் கடன்
செய்தி முன்னோட்டம்
நாட்டில் திருமணங்கள் நிறைய நடந்தாலும் அதற்கான செலவுகளை நினைத்து பல கடன்களை வாங்க நேரிடுகிறார்கள்.
இதனிடையே, 'Buy Now Pay Later' முறையில் 'Marry Now Pay Later' என்ற திருமணக் கடன் முறை அறிமுகமாகியுள்ளது.
இதை திருமணங்களுக்கு கடன் பெற்று பின்னர் EMI முறையில் செலுத்திக்கொள்ளலாம்.
பொதுவாக திருமணங்களுக்காக திருமண மண்டபம், ஹோட்டல், அலங்காரம், மேக் அப், நகைகள், ஆடைகள், உணவு விருந்து, கார், வீட்டு உபயோக பொருட்கள் என ஆடம்பரம் நிறைந்ததாகவே இருக்கும்.
இதற்கு பெரும்பாலானவர்கள் திருமணங்களுக்கு பர்சனல் கடன்களை வாங்குகின்றனர். பர்சனல் கடன்களுக்கு வட்டி அதிகம்.
திருமணக் கடன் திட்டம்
திருமணத்திற்கான சூப்பர் கடன் திட்டத்தை வழங்கும் நிறுவனம்
அந்தவகையில், தான் sanKash என்ற நிதி நிறுவனம் திருமணங்களுக்கு 'Marry Now - Pay Later' முறையில் புதிய கடன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடன் வாங்கிக்கொண்டு இஎம்ஐ முறையில் திரும்ப செலுத்திக்கொள்ளலாம்.
இதில், முதல் ஆறு மாதங்களுக்கு மட்டும் வட்டியே இல்லாமல் EMI செலுத்தலாம்.
தொடர்ந்து, ஒரு ஆண்டுக்கான கடன் திட்டத்தை தேர்வு செய்தால் மாதம் 1% வட்டி விதிக்கப்படும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் திருமணச் சந்தை மதிப்பு சுமார் 4 லட்சம் கோடி டாலராக உள்ளது. இந்த சூழலில், திருமணச் செலவுகளை சமாளிப்பதற்காக SanKash நிறுவனம் இந்த நூதனக் கடன் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.