10 லட்சம் ரிட்டன் தரும் எல்.ஐ.சி. சூப்பரான பாலிசி திட்டம்!
காப்பீட்டு திட்டத்தால் பல நன்மைகள் உள்ளது. ஆனால் அதில் எந்த காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பது முக்கியம். அந்த வகையில், மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான LIC ஆனது ஜீவன் உமாங் திட்டத்தை நிதி பாதுகாப்பு மற்றும் காப்பீடு நோக்கில் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில், நல்ல ரிட்டன் மட்டுமில்லாமல், வருமான வரிச் சட்டம் 80சி இன் படி வரி விலக்கும் அளிக்கிறது. மேலும், இதனை கூடுதல் ஆவணமாக பயன்படுத்தி கடன் வாங்கி கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சியின் பாலிசி திட்டத்தின் முக்கிய நோக்கம்
முக்கிய நோக்கம் என்ன? இந்த திட்டம் ஒருவர் ரூ.10 லட்சம் ரிட்டன் பெற நீண்ட கால முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, மாதம் ரூ.4.166 செலுத்தினால், ஆண்டுக்கு, ரூ.50 ஆயிரம் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் முதிர்வுக்கு பின்னர் உறுதியளிக்கப்பட்ட வருமானமாக ரூ.10 லட்சம் கிடைக்கும். தொடர்ந்து, முதலீட்டாளர்கள் இறக்க நேரிட்டால், பாலிசி காப்பீடு தொகை ரூ.10 லட்சம் குடும்பத்திற்கு கொடுக்கப்படும். எந்த வயதில் தொடங்கலாம்? இந்த திட்டத்தை தொடங்க 8 வயதில் இருந்து 55 வயதுக்கு உட்பட்ட நபர்கள் தொடங்கி கொள்ளலாம். மேலும், குறைந்தப்பட்ச காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் ஆகும். அதிகப்பட்ச காப்பீடு தொகைக்கு கட்டுப்பாடு கிடையாது.