Page Loader
டிடிச் மற்றும் கேபிள் டிவி கட்டணம் 30% உயரும்! கவலையில் ஆபரேட்டர்கள்
டிடிச் கேபிள் டிவி கட்டணம் பிப்ரவரி 1 முதல் 30% உயர்வு

டிடிச் மற்றும் கேபிள் டிவி கட்டணம் 30% உயரும்! கவலையில் ஆபரேட்டர்கள்

எழுதியவர் Siranjeevi
Jan 28, 2023
06:20 pm

செய்தி முன்னோட்டம்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டிவி சேனல்களின் விலை நிர்ணயம் மீதான புதிய கட்டண உத்தரவு பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இதனால் டிடிஎச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் டிவி சேனல்களின் விலையில் 30% அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒடிடி சேனல்களின் வளர்ச்சி அதிகரிப்பால் சந்தாதாரர்களை இழக்க நேரிடும் என்று ஆபரேட்டர்கள் அஞ்சுகின்றனர். இதனால், கட்டண உயர்வை நிறுத்துமாறு டிராயிடம் வழக்காக கொடுத்து அணுகியிருந்தனர். நவம்பரில், டிராய் புதிய கட்டண ஆணை 2.0 ஐ திருத்தியது, அதன் ஒரு பகுதியாக டிவி சேனலின் தொகையாக ஒரு பகுதியாக ரூ.12ல் இருந்து ரூ.19க்கு மீட்டெடுத்தது.

கேபிள் டிவி கட்டணம்

டிடிச் மற்றும் கேபிள் டிவி கட்டணம் மேலும் 30% உயரும் - கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கை என்ன?

மேலும், டிடி ஃப்ரீ டிஷ் மற்றும் OTT பிளேயர்களால் சந்தாதாரர்களை தொடர்ச்சியாக இழந்து வரும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் நிலை குறித்து டிராய்க்கு தெரியும். ஆனாலும், ஒளிபரப்பாளர்களுக்கு ஆதரவாக ஏற்றப்படும் இத்தகைய அணுகுமுறையை அது பின்பற்றியிருக்கக் கூடாது" என்று உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர் ஒருவர் கூறியிருந்தார். கேபிள் டிவி தொழில்துறையானது தொடர்ச்சியான வணிக இழப்பு காரணமாக சுமார் 150,000 பேர் வேலை இழப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி ட்ராய்க்கு அனுப்பிய கடிதத்தில், கேபிள் கூட்டமைப்பு, நுகர்வோருக்கு சேனல்களின் விலை உயர்த்தப்படாது என்று உறுதியளித்த போதிலும், சேனல்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். எனவே, டிராயின் முடிவால் கடுமையான பாதிப்புகளை கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.