நிலவுக்குச் விண்கலத்தை அனுப்பும் நாசாவின் புதிய திட்டம்!
செய்தி முன்னோட்டம்
வரும் மே 4-ம் தேதிக்குள் நிலவிற்கு 6 அடி விண்கலத்தை அனுப்பும் பெரிகிரின் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது நாசா.
Commercial Lunar Payload Services-ன் (CLPS) கீழ் இத்திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது நாசா. இதற்காக வணிக ரீதியாக ஒரு நிறுவனத்துடனும் நாசா கூட்டணி அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Peregrine Mission 1 என்றழைக்கப்படும் இந்த திட்டத்தினை ஃப்ளோரிடாவின் கேப் கார்னிவல் ஏவல் தளத்தில் இருந்து ஏவப்படவிருக்கிறது.
ஏவப்பட்டவுடன் 40 நாட்கள் பயணம் செய்து நிலவின் சைனஸ் விஸ்காசிடாடிஸ் பகுதியில் இந்தக் களம் தரையிறங்கும் வகையில திட்டமிடப்பட்டிருக்கிறது.
மேலும், இந்தத் திட்டத்தி 192 மணி நேரம் இயக்கத்தில் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது நாசா.
கிட்டத்தட்ட 10-க்கும் அதிகமான அறிவியல் உபகரணங்களை இந்தத் திட்டத்தில் பயன்படுத்தவிருக்கிறது நாசா.
நாசா
எதற்காக இந்தத் திட்டம்:
இந்தத் திட்டத்தின் மூலம் நிலவின் புறவளிமண்டலம் மற்றும் நிலவின் தரைப்பரப்பில் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது நாசா.
LRA, LETS, NIRVSS, PITMS மற்றும் NSS உள்ளிட்ட அறிவியல் உபகரணங்களை ஆராயச்சியாக இதன் கலம் கொண்டு செல்லவிருக்கிறது.
90 கிலோ எடையிலான அறிவியல் உபகரணங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் நிலவுக்கு கொண்டு செல்லப்படவிருக்கிறது.
நிலவின் வெப்பப் பண்புகள், அதன் தரைப்பரப்பில் ஹைட்ரஜன் வளம் மற்றும் அதன் சுற்றுச்சூழலில் உள்ள கதிர்வீச்சு ஆகியவை குறித்து ஆய்வுகள் செய்யப்படவிருக்கிறது.
இதில் அனுப்பப்படும் NIRVSS உபரகணம் மூலம் தரைப்பரப்பின் கீழ் கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் செய்யப்படவிருப்பதாக அதன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறது நாசா.