இந்தியாவில் ட்விட்டர் நிறுவனங்கள் மூடல்! காரணம் என்ன?
இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில் 2 அலுவலகங்களை எலான் மஸ்க் மூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் ட்விட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ட்விட்டரின், ப்ளூடிக்கிற்கு கட்டணம், அதிரடியாக ஆட்குறைப்பு, ஊழியர்களுக்கு வேலை பணி அதிகரிப்பு போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இந்தியாவில் செலவினங்களை குறைக்கும் வகையில் டெல்லி, மும்பை அலுவலகங்களை மூடுவதாக டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரையில் டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய 3 இடங்களில் டிவிட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.
இந்தியாவில் 2 ட்விட்டர் அலுவலகத்தை மூடிய எலான் மஸ்க்
இந்தியாவில் 2 நிறுவனங்கள் மூடல் இதனிடையே, தற்போது டெல்லி மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் அலுவலகங்கள் மூடப்பட்டு, அதில் பணியாற்றி வந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவிட்டர் இந்தியாவின் 90% ஊழியர்கள் இந்த 2 அலுவலகங்களிலும் பணியாற்றி வந்துள்ளனர். இனி ஒரு அலுவலகத்தில் மட்டுமே செயல்படும் மேலும், ஆட்குறைப்பு முயற்சியின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த அலுவலகங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி மீதமுள்ள அனைத்து செயல்பாடுகளுமே பெங்களூரு அலுவலகத்தில் இருந்து மட்டுமே செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.