Page Loader
எலான் மஸ்க் தனது ட்வீட்களை பிரபலமாக்க அல்காரிதத்தையே மாற்றினாரா?
எலான் மஸ்க் அல்காரிதத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது

எலான் மஸ்க் தனது ட்வீட்களை பிரபலமாக்க அல்காரிதத்தையே மாற்றினாரா?

எழுதியவர் Siranjeevi
Feb 15, 2023
12:36 pm

செய்தி முன்னோட்டம்

எலான் மஸ்க்கின் ட்வீட்கள் செயற்கையாக 1,000 மடங்கு அதிகம் ரீச் ஆவதாகக் கூறப்படுகிறது. உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கியதில் இருந்து தினமும் செய்தி பொருளாகவே மாறியுள்ளார். கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் முக்கிய சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவரும் அடிக்கடி பல சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பேசும் பொருளாகவே மாறிவிடுகிறார். அந்த வகையில், எலோன் மஸ்க்கின் தனது சமூக ஊடக தளமான ட்விட்டரின் பொறியாளர்களை தனது ட்வீட்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்துடன் அல்காரிதத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தியதாக பிளாட்ஃபார்மர் கூறியுள்ளது. அதன் காரணமாக,பல பயனர்களின் பக்கங்களில் எலோன் மஸ்க்கின் ட்வீட்கள் முக்கியமாகக் காணப்பட்டன. அதன்பின், அவரது ட்வீட்களை ஏராளமான பயனர்கள் பார்த்ததாக ட்விட்டரில் உள்ள பயனர்கள் புகார் கூறினர்.

எலான் மஸ்க்

டிவீட்கள் அதிகம் நபர்களை சென்றடைய என்ன செய்கிறார் எலான் மஸ்க்?

மேலும், மஸ்க் தனது தனிப்பட்ட பக்கத்தில் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறப்பட்டது. ட்விட்டரை வாங்குவதற்கு முன்பாக, எலான்ன் மஸ்க், சமூக ஊடக தளத்தை ஒரு சமமான விளையாட்டுக் களமாக மாற்றுவதும், அமைப்பில் உள்ள சார்புகளை அகற்றுவதும் தனது நோக்கம் என்று கூறியிருந்தார். இந்த அறிக்கைக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. மேலும், தனது ட்வீட்களை ட்விட்டர் பயனர்களுக்கு வலுக்கட்டாயமாக கொண்டு சேர்ப்பதாகக் கூறி ஒரு மீம் ஒன்றை ட்வீட் செய்தார். தொடர்ந்து சமூக ஊடக தளம் அல்காரிதத்தில் மாற்றங்களைச் செய்து வருவதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.