தனது பிரபலத்துவம் குறைந்துவிட்டது! ஊழியரை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்;
ட்விட்டர் நிறுவன தலைமை அதிகாரியான எலான் மஸ்க் ட்விட்டரில் பல மாற்றங்களை கொண்டு வருகிறார். அதேப்போல் ட்விட்டர் ஊழியர்கள் பலரையும் வீட்டில் இருந்து பணிபுரியவும், பணி நீக்கத்தையும் அறிவித்து இருந்தது. இந்நிலையில், தனது ட்விட்டர் கணக்கில் பிரபலமடையவில்லை என ஊழியர் ஒருவரை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது அபத்தமானது, எனக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர், மேலும் நான் பல்லாயிரக்கணக்கான பதிவுகளை பெறுகிறேன் என்ன நடக்கிறது என விளக்கம் கேட்டார். அவர்கள் அளித்த பதில் திருப்தி அளிக்காததாலும், Google Trends-லும் அவரது கணக்கும் மக்களிடையே ஆர்வத்தை தூண்டவில்லை எனவும் பணி நீக்கத்தில் ஈடுப்பட்டார்.