பூமி சீராக ஓடி கொண்டிருக்கிறது! 2024க்கு லீப் விநாடி தேவையில்லை
அறிவியல்: 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய நேரத்தில் லீப் செகண்ட் சேர்க்கப்படாது என்று சர்வதேச புவி சுழற்சி மற்றும் குறிப்பு அமைப்புகள் சேவை(IERS) அறிவித்துள்ளது. இந்த முடிவு அணு கடிகார நேரம்(UTC) மற்றும் பூமியின் சுழற்சி நேரம்(UT1) ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) சார்பாக இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்ட IERS , இந்த ஆண்டு உலகளாவிய நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட தேவையில்லை என்று கூறியுள்ளது. லீப் விநாடிகள், GPS போன்ற அமைப்புகளின் துல்லியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
லீப் விநாடிகளின் வரலாறும் உலக அமைப்புகளில் அதன் தாக்கமும்
UTC ஐ நம்பியிருக்கும் பிற துல்லியமான வழிசெலுத்தல் மற்றும் நேர பயன்பாடுகள் உள்ளிட்ட அமைப்புகளும் இதையே சார்ந்துள்ளன. பூமியின் சுழற்சி நேரத்தைக் குறிக்கும் UT1 என்பது பல வானியல் அமைப்புகளுக்கு இன்றியமையாதது. UTC மற்றும் UT1 இடையே உள்ள முரண்பாடுகள் கணினி செயலிழப்புகளுக்கு வழிவகுக்கும். அதனால் பூமியின் சுழற்சியை சரியாக கணக்கிட்டு நேரத்தை துல்லியமாக வைத்திருப்பது மிக அவசியமாகும். சில நேரங்களில், பூமியின் சீரற்ற சுழல் வேகம் காரணமாக, அணு கடிகார நேரத்தில்(UTC) பூமியின் நேரம் கொஞ்சம் முன்னும் பின்னுமாக இருக்கும். அப்போது UTCயின் நேரமும் UT1யின் நேரமும் ஒத்து போகாது. அந்த மாதிரி சமயங்களில் UT1யில் கூடுதலான லீப் விநாடிகள் சேர்க்கப்டுகின்றன.