LOADING...
இனி WiFi வேகம் அதிரும்: இந்தியாவில் Wi-Fi 7 தொழில்நுட்பத்திற்கு வழிவகுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு
அலைக்கற்றையை WiFi சேவைகளுக்காக எவ்வித கட்டணமும் உரிமமும் இன்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்

இனி WiFi வேகம் அதிரும்: இந்தியாவில் Wi-Fi 7 தொழில்நுட்பத்திற்கு வழிவகுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 22, 2026
02:53 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் அதிவேக இணைய சேவையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, 5925-6425 MHz வரையிலான 500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை உரிமம் இன்றி பயன்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களும் நிறுவனங்களும் இந்த அலைக்கற்றையை WiFi சேவைகளுக்காக எவ்வித கட்டணமும் உரிமமும் இன்றி பயன்படுத்திக் கொள்ள முடியும். நியூஸ் 18 செய்தியின்படி, தற்போது நாம் பயன்படுத்தும் வைஃபை வேகத்தை விடப் பல மடங்கு அதிக வேகத்தைத் தரக்கூடிய 'வைஃபை 7' (Wi-Fi 7) தொழில்நுட்பம் செயல்பட இந்த 6 GHz அலைக்கற்றை மிகவும் அவசியமானது.

முக்கியத்துவம்

புதிய தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மைகள்

வீடு மற்றும் அலுவலகம்: உட்புறப் பயன்பாட்டிற்கான (Low Power Indoor) கருவிகள் மூலம் இனி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மிக அதிவேக பிராட்பேண்ட் இணைப்பைப் பெற முடியும். தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதரவு: ஆப்பிள், அமேசான், மெட்டா மற்றும் கூகுள் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்த அலைக்கற்றையை முழுமையாக விடுவிக்கக் கோரி வந்தன. டெலிகாம் நிறுவனங்கள் எதிர்ப்பு: ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் இந்த அலைக்கற்றையை ஏலத்தில் விட வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், அரசு அதன் ஒரு பகுதியை மட்டும் பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கியுள்ளது.

Advertisement