பெட்ரோல் பைக்கை மிஞ்சும் மின்சார வாகனம் அறிமுகம்! ஒரே சார்ஜில் 200கிமீ பயணம்;
ஆட்டோ எக்ஸ்போவின் கடைசி நாளில் ஜோத்பூரை சேர்ந்த DEVOT மோட்டார்ஸ் எனப்படும் EV ஸ்டார்ட்அப் அதன் சொந்த மின்சார மோட்டார் சைக்கிளை வெளியிட்டுள்ளது. இந்த மின்சார இரு சக்கர வாகனம் 200 கிமீ தூரமும் 120கிமீ வேகத்துடன் செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, 9.5kW உயர் செயல்திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்குகிறது. இந்த பைக்கை வெறும் 3 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். இந்த எலெக்ட்ரிக் பைக் இந்த ஆண்டின் மத்தியில் வெளியிடப்படப்படும் எனக்கூறப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்தே கட்டமைக்கப்படுகின்றன. மேலும், இதில், இரண்டு வகையான சார்ஜிங் பாயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியை பாதுகாக்க DEVOT மோட்டார்ஸ் லித்தியம் LFP பேட்டரி பயன்படுத்தியுள்ளது.
ரிவோல்ட் மற்றும் டார்க் மின்சார வாகனங்களுக்கு போட்டியாக அமையும் டெவோட்
இவை இது தீ விபத்தை தவிர்க்கும் வசதிக் கொண்டது என கூறப்படுகின்றது இதுமட்டுமின்றி, டிஎஃப்டி திரை, சாவியில்லாமல் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்யும் வசதி, திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனம் வெகு விரைவில் இருசக்கர வாகனம் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டெவோட் நிறுவனத்தின், இந்த மின்சார பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில் தற்போது விற்பனையில் இருக்கும் ரிவோல்ட் நிறுவனத்தின் இ-பைக் மற்றும் டார்க் நிறுவனத்தின் மின்சார பைக் ஆகிய இரண்டிற்கும் கடுமையான போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.