Page Loader
சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்!
ஆன்லைன் மோசடி மூலம் ரூ.1 லட்சத்தை இழந்த டெல்லி பெண்

சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 29, 2023
03:04 pm

செய்தி முன்னோட்டம்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் விதவிதமான முறைகளில் ஆன்லைன் மோசடிகள் மூலம் பணத்தை பறிக்கும் செயல்களில் மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மோசடிகளில் பயனர்களின் அலட்சியமும், பேராசையுமே அவர்களது இழப்பிற்கு காராணமாகிறது. சமூக வலைத்தளத்தில் உணவு டெலிவரியில் சலுகை வழங்கப்படுவதாகக் கூறி பதிவு செய்யப்பட்டிருந்து பதிவு ஒன்றைப் பார்த்து டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் மோசடியில் சிக்கிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சமூக வலைத்தளம் ஒன்றில் 'ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்' எனக் கூறி பிரபல உணவு நிறுவனத்தின் பெயரில் பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருந்திருக்கிறது. அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணிற்கு இது குறித்து விசாரணை செய்வதற்காக தொடர்பு கொண்டிருக்கிறார் மோசடி செய்யப்பட்ட பெண்.

ஆன்லைன் மோசடி

பயனர்களே உஷார்: 

முதல் முறை மறுமுனையில் எந்தவித பதிலும் வரவில்லை. பின்னர் சிறிது நேரத்தில் அதே எண்ணில் இருந்து இவரை தொடர்பு கொண்டு, மேற்கூறிய சலுகை வேண்டுமானால் தாங்கள் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்து ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர் மோசடி நபர்கள். அதனை உண்மை என நம்பிய இவரும், மோசடி நபர்கள் கூடிய போல ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து அவர்கள் கூறியது போலே செயலியில் உள்நுழைந்திருக்கிறார். அவ்வளவு தான், இவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.40,000 பரிமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அதன் பின்னர், இவரது கடன் அட்டையிலிருந்து ரூ.50,000 வேறொரு வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.