8.5 மில்லியன் விண்டோஸ் சாதனங்களை செயலிழக்கச் செய்தது CrowdStrike இன் தவறான புதுப்பிப்பு
செய்தி முன்னோட்டம்
CrowdStrike இன் தவறான புதுப்பிப்பு உலகளாவிய தொழில்நுட்ப பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை 8.5 மில்லியன் விண்டோஸ் சாதனங்கள் பாதிக்கப்பட்டது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
ஒரு சதவீதத்திற்கும் குறைவான விண்டோஸ் சாதனங்கள் இதனால் செயலிழந்தது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
எனவே, விண்டோஸ் சாதனங்களை நம்பியிருந்த சில்லறை விற்பனையாளர்கள், வங்கிகள், விமான நிறுவனங்கள் மற்றும் பல தொழில்கள் ஆகியவற்றும் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
தனித்தனியாக வெளியிடப்பட்ட இரு CrowdStrike இன் அறிக்கைகள், தொழில்நுட்ப முறிவு எப்படி நடந்தது என்பதையும் ஏன் பல அமைப்புகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டது என்பதையும் பற்றி மேலும் விளக்குகிறது.
விண்டோஸ்
CrowdStrike புதுப்பிப்பு கணினிகளை என்ன செய்தது?
CrowdStrike புதுப்பிப்புக்கு வழங்கப்பட்டிருந்த உள்ளமைவு கோப்பினால் இவ்வளவு பெரிய பேரழிவு நடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 19, 2024 அன்று 04:09 UTC மணிக்கு, நடந்துகொண்டிருக்கும் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, CrowdStrike, விண்டோஸ் சிஸ்டங்களுக்கு சென்சார் உள்ளமைவு புதுப்பிப்பை வெளியிட்டது.
சென்சார் உள்ளமைவு புதுப்பிப்புகள் ஃபால்கன் இயங்குதளத்தின் பாதுகாப்பு வழிமுறைகளின் ஒரு பகுதியாகும்.
இந்த உள்ளமைவு புதுப்பிப்பு ஒரு தர்க்கப் பிழையைத் ஏற்படுத்தியதால், கணினி செயலிழப்புக்கு வழிவகுத்தது. இதனால், பாதிக்கப்பட்ட கணினிகளில் நீல திரை(BSOD) பிரச்சனை ஏற்பட்டது.