LOADING...
வாட்ஸ்அப் உலகளாவிய சிஇஓவாகிறார் கிரெட் நிறுவனர் குணால் ஷா; முழு விபரம்
வாட்ஸ்அப் உலகளாவிய சிஇஓவாகிறார் கிரெட் நிறுவனர் குணால் ஷா

வாட்ஸ்அப் உலகளாவிய சிஇஓவாகிறார் கிரெட் நிறுவனர் குணால் ஷா; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 22, 2026
07:34 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியத் தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட்அப் வரலாற்றிலேயே மிக முக்கிய மைல்கல்லாக, பிரபல ஃபின்டெக் நிறுவனமான கிரெட் (CRED) நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப்பின் புதிய உலகளாவிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மெட்டா நிறுவனம் கிரெட்டில் சுமார் $900 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹8,550 கோடி) முதலீடு செய்து, அந்நிறுவனத்தின் 20 சதவீதப் பங்குகளைக் கைப்பற்றியுள்ள நிலையில் இந்த தலைமைப் பொறுப்பு மாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் தலைமை

7 ஆண்டுகளுக்குப் பிறகு மாறும் வாட்ஸ்அப் தலைமை

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி, அதன் பயனர் எண்ணிக்கையை 3 பில்லியனுக்கும் மேல் உயர்த்திய தற்போதைய தலைவர் வில் கேத்கார்ட் தனது பதவியிலிருந்து விலகுகிறார். மெட்டா நிறுவனத்திலேயே நீடிக்கும் அவர், இனி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த நுகர்வோர் செயலிகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்கும் புதிய பிரிவிற்குத் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாகவே, குணால் ஷா வாட்ஸ்அப் உலகளாவிய நிர்வாகக் குழுவின் உச்ச பதவியில் அமரவுள்ளார்.

மெட்டா நிறுவனர் பாராட்டு

குணால் ஷாவின் திறமையைப் பாராட்டிய மார்க் ஜுக்கர்பெர்க்

இந்த நியமனம் குறித்து மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ள பதிவில், "குணால் ஷா மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ்அப்பின் அடுத்த தலைவராக இணையவுள்ளார். இந்தியாவில் மிக முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கிரெட்டை அவர் கட்டமைத்தார். உலகின் மிகப்பெரிய மெசேஜிங் செயலியை இயக்குவதற்குத் தேவையான பில்டர் மென்டாலிட்டியும், உலகளாவிய பார்வையும் அவரிடம் உள்ளது. பில்லியன் கணக்கான மக்கள் மற்றும் மில்லியன் கணக்கான வணிகங்களுக்கு வாட்ஸ்அப்பை சிறந்த சேவையாக மாற்ற அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன்." என்று மனதாரப் பாராட்டியுள்ளார்.

Advertisement

கிரெட்டின் புதிய சிஇஓ 

கலிபோர்னியாவிற்குப் இடம்பெயரும் குணால் ஷா; கிரெட்டின் புதிய சிஇஓ யார்?

வாட்ஸ்அப்பின் உலகளாவிய வணிகப் பொறுப்புகளைக் கவனிப்பதற்காக, தற்போது பெங்களூருவில் வசித்து வரும் குணால் ஷா, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மென்லோ பூங்காவில் அமைந்திருக்கும் மெட்டா தலைமையகத்திற்கு இடம்பெயர உள்ளார். அவர் கிரெட் நிறுவனத்தின் அன்றாட செயல்பாட்டு சிஇஓ பதவியிலிருந்து முழுமையாக விலகினாலும், அதன் பங்குதாரராக நீடிப்பார். இதற்கிடையே, கிரெட் நிறுவனத்தின் புதிய இடைக்கால சிஇஓவாக, 2020 முதல் அந்நிறுவனத்தின் உத்தி மற்றும் நிதிப் பிரிவை நிர்வகித்து வரும் மிதேன் சம்பத் உடனடியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

Advertisement

வாட்ஸ்அப் பிசினஸ்

வாட்ஸ்அப் பிசினஸ் மற்றும் ஏஐ ஒருங்கிணைப்புக்குக் கிடைக்கும் பலம்

மெட்டா நிறுவனத்திற்கு உலகிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்குவது இந்தியா தான். வாட்ஸ்அப் மூலம் விளம்பர வருவாய், சந்தா தயாரிப்புகள் மற்றும் வாட்ஸ்அப் பே மூலமான வணிக சேவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மெட்டா திட்டமிட்டுள்ளது. குணால் ஷாவின் ஃபின்டெக் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு அனுபவம், வாட்ஸ்அப் செயலியில் செயற்கை நுண்ணறிவு ஏஜெண்டுகளை ஒருங்கிணைப்பதற்கும், அதன் மூலம் வணிகப் பரிவர்த்தனைகளை பன்மடங்கு பெருக்குவதற்கும் பெரிதும் உதவும் என மெட்டாவின் தயாரிப்பு அதிகாரி கிறிஸ் காக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement