
பூமியைத் தாக்க வரும் 'Coronal Mass Ejection'.. அப்படி என்றால் என்ன?
செய்தி முன்னோட்டம்
விண்வெளியில் சூரியனில் இருந்து வெளிப்படும் கரனோல் மாஸ் எஜெக்ஷனானது (Coronal Mass Ejection) நாளை பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இதனால் G1 வகை புவிகாந்தப் புயல் பூமியில் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால், இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று தெரிவித்திருக்கிறனர். முதலில் கரோனால் மாஸ் எஜெக்ஷன் என்றால் என்ன?
சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து அதிகளவில் வெளியேறும் பிளாஸ்மா மற்றும் காந்த புலத்தையே கரோனல் மாஸ் எஜெக்ஷன் எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்த கரோனல் மாஸ் எஜெக்ஷனானது சுமார் 250 முதல் 3000 கிமீ வேகத்தில் பயணிக்கு திறனுடையது. அவை சூரியனில் இருந்து வெளியேறி பூமியை வந்தடைய 3 முதல் 5 நாட்கள் வரை ஆகுமாம்.
விண்வெளி
இவை பூமியைத் தாக்குவதனால் என்ன நடக்கும்?
அவை பூமியை அடையும் போது, பூமியை அபாயகரமான கதிவீச்சுகளில் இருந்து காக்கும் காந்த மண்டலத்தை முதலில் தாக்கும்.
இதனால், பூமியன் மேற்புற வளிமண்டலத்தில் உள்ள காற்று மூலக்கூறுகள் ஒளியை உமிழும். இதுவே பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அழகிய அரோராவாகத் (Aurora) காட்சி தரும்.
குறைந்த பாதிப்பற்ற கரோனல் மாஸ் எஜெக்ஷன் என்றால் இப்படியான விளைவு ஏற்படும். கொஞ்சம் வலிமையானது என்றால் செயற்கைகோள்களைத் தாக்கி தொலைதொடர்பு சேவையை செயலிழக்கச் செய்யலாம், இதனால் எலெக்ட்ரிக் கரண்ட் அதிகரித்து பவர் கிரிட்கள் செயலிழக்கலாம். இது போன்ற எதிர்மறைச் விளைவுகளும் ஏற்படலாம்.
இந்த கரோனால் மாஸ் எஜெக்ஷன் பூமியில் ஏற்படுத்தும் காந்தப் புயலின் ஆபத்தின் அளவைப் பொறுத்து G1 முதல் G5 வரையிலான பெயரை அளிப்பார்கள்.