முன்னாள் சிஇஓ-வை ஏன் பணிநீக்கம் செய்தது காக்னிசன்ட் நிறுவனம்?
செய்தி முன்னோட்டம்
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான காக்னிசன்டின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ரவி குமார் எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான பிரயன் ஹம்ப்ரீஸை காரணம் ஏதும் இல்லாமல் தான் சிஐஓ பதவியில் இருந்து நீக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தொடர்ந்து பல வருடங்களாக அந்நிறுவனத்தின் வளர்ச்சி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. மேலும், பணியாளர்கள் தொடர்ந்து நிறுவனத்தை விட்டு வெளியேறி வந்தனர்.
இந்நிலையில் தான், அந்நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்கவிருந்த ரவி குமார் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஜனவரி மாதம் பொறுப்பேற்றார்.
காக்னிசன்டில் இணைவதற்கு முன்பாக அவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம்
புதிய தலைமை:
முன்னதாக, அந்நிறுவனத்தின் வாரியத் தலைவரான ஸ்டீபன் ஜே.ரோல்டர் பங்குதாரர்களுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், 'நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுக்கவும், வருவாயைப் பெருக்கவும், புதிய தலைமையின் கீழ் நிறுவனம் பயணப்பட வேண்டியது அவசியம்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரின் இந்தக் கடிதத்தைத் தொடர்ந்தே பிரயனை நீக்கிவிட்டு ரவிக் குமார் புதிய சிஐஓ-வாகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
தன்னுடைய பணிகளை ஒப்படைப்பதற்காக மார்ச் 15 வரை பணியில் இருந்திருக்கிறார் ஹம்ப்ரீஸ்.
சமீபத்தில் தான் தங்களுடைய நிர்வாகிகளுக்கு வருடாந்திர சம்பளம் மற்றும் போனஸை விட 2.99 மடங்கு அதிகமாக வேலை நீக்க ஊதியம் வழங்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தியது அந்நிறுவனம்.
ஆனால், ஹம்ப்ரீஸ் பதவியேற்றபோது இந்தக் கொள்கை இல்லாத காரத்தினால், தன்னுடைய வேலை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தபடியே பணிநீக்க ஊதியத்தை அவர் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.