Page Loader
2025 ஆம் ஆண்டிற்குள் தேசிய  கம்ப்யூட் திறனை 30% அதிகரிக்க சீனா திட்டம்

2025 ஆம் ஆண்டிற்குள் தேசிய  கம்ப்யூட் திறனை 30% அதிகரிக்க சீனா திட்டம்

எழுதியவர் Sindhuja SM
Jul 08, 2024
06:03 pm

செய்தி முன்னோட்டம்

சீனா அதன் தேசிய கம்ப்யூட் திறனை இந்த ஆண்டு மட்டும் 30 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதார மாநாடு 2024 இல் வெளியிடப்பட்டன. அதில் கலந்து கொண்ட சீனா அகாடமி ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் டெக்னாலஜியின் பிரதிநிதி வாங் சியாலி, சீனாவில் 8.1 மில்லியனுக்கும் அதிகமான டேட்டாசென்டர் ரேக்குகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் அவை 230 எக்ஸாஃப்ளோப்ஸின் ஒருங்கிணைந்த செயலாக்க சக்தியுடன் செய்லபடுவதாகவும் கூறினார். 2025ஆம் ஆண்டுக்குள் 300 எக்ஸாஃப்ளோப்ஸை அடைய வேண்டும் என்பது சீனாவின் கொள்கையாகும். அதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சீனா 

இந்த வளர்ச்சிக்கு டெஸ்லாவும் ரூ காரணம் என தகவல் 

இந்நிலையில், வரும் மாதங்களில் சீனா தனது தேசிய கம்ப்யூட் அமைப்பில் மேலும் 70 எக்ஸாஃப்ளோப்ஸை சேர்க்க உள்ளது. ஆனால், அதை எவ்வாறு சீனா சேர்க்க திட்டமிட்டுள்ளது என்பது பற்றி விவாதிக்கப்படவில்லை. சீனாவில் 2022ஆம் ஆண்டில் 180 எக்ஸாஃப்ளோப்ஸ் இருந்ததாகவும், அது தற்போது 197 ஆக உயர்ந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சியில் டெஸ்லா நிறுவனத்திற்கு பங்கு உள்ளது என்று இன்னொரு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. "ஷாங்காய் பைலட் தடையற்ற வர்த்தக மண்டலத்தில் உள்ள பல அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் சமீபத்தில் கார்ப்பரேட் பயன்பாட்டிற்காக டெஸ்லா மாடல் Y வாகனங்களை வாங்கியுள்ளன" என்று அந்த ஊடகம் கூறியுள்ளது.