தொடர்ச்சியாக உயரும் தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!
தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் மற்றும் இறக்கத்துடனே செல்கிறது. அட்சய திருதியை தினத்தின் போது ஏறிய தங்கம் விலை தொடர்ந்து உயர்விலேயே உள்ளது. அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த வகையில், இன்றைய நாள் ஏப்ரல் 26 ஆம் தேதிப்படி தங்கம் விலையானது, 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து 5,642 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 96 ரூபாய் வீதம் உயர்ந்து ரூ.45,136 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளியானது கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 எனவும் விற்பனையாகிறது.