நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!
இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது. தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும், அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி, அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு. இந்நிலையில், இன்றைய நாள் ஏப்ரல் 19 ஆம் தேதியில், தங்கம் விலை மீண்டும் உச்சத்திற்கு சென்றுள்ளது. அட்சய திரிதியை நெருங்குவதால் மேலும் விலை ஏறலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது - இன்றைய நிலவரம்
அதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு 15 உயர்ந்து 5,665க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சவரனுக்கு 120 உயர்ந்து 45,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 81 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 81,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரத்தில் அட்சய திருதியை வர இருப்பதால் நகைப்பிரியர்கள் தங்க வாங்க ஆர்வம் காட்டிவருகிறார்கள் இதனால் இன்றயை நாள் முதல் இருந்தே தங்கம் விலை ஏறத்தொடங்கும் எனக்கூறப்படுகிறது.