Page Loader
சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள் 
தங்கம் விலையானது ஏப்ரல் 12 இல் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது

சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள் 

எழுதியவர் Siranjeevi
Apr 12, 2023
01:46 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது. தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும், அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி, அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு. இந்நிலையில், இன்றைய நாள் ஏப்ரல் 12 ஆம் தேதியில், 22 காரட் ஆபரணத் தங்கம் விலையானது கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 5,680 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது - இன்றைய நிலவரம் 

அதுவே, சவரன் ஒன்றுக்கு 400 ரூபாய் விதம் உயர்ந்து ரூ.45,440 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 41 ரூபாய் விதம் உயர்ந்து 4,653 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதில், சவரன் ஒன்றுக்கு ரூ.328 வரை உயர்ந்து ரூ.37,224 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை வெள்ளியின் விலையை பொறுத்த வரையில், ஒரு கிராம் வெள்ளி ஆனது ரூ.80.40 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.