Page Loader
மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! 
தங்கம் விலையானது ஏப்ரல் 11 இல் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! 

எழுதியவர் Siranjeevi
Apr 11, 2023
12:22 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தங்கம் விலை ஆனது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. விலை உயர்வு பல காரணங்கள் உண்டு. அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி, அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு. இந்த நிலையில், இன்றைய நாள் ஏப்ரல் 11 ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5,630 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது.

details

தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது - இன்றைய நிலவரம் 

அதுவே, சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் உயர்ந்து ரூ.45,040 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து 4,612 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 வரை உயர்ந்து ரூ.36,896 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை வெள்ளியின் விலையில் பொறுத்த வரையில் ஒரு கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 80.40 ரூபாய் எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400 எனவும் விற்பனையாகிறது.