
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.
அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு.
இந்த நிலையில், இன்றைய நாள் ஏப்ரல் 05 ஆம் தேதி படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.90 அதிகரித்து 5,690 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சவரன் ஒன்றுக்கு 720 ரூபாய் அதிகரித்து ரூ.44,520 ஆகவும் விற்பனையாகிறது.
தங்கம் விலை
தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒரே நாளில் அதிகரித்துள்ளது - இன்றைய நிலவரம்
அதுவே, 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 74 ரூபாய் அதிகரித்து 4,661 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.592 வரை அதிகரித்து ரூ.37,288 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவாக ரூ.2.90 காசுகள் உயர்ந்து ரூ.80.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700 எனவும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன.
இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும்.
அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.