ChatGPT Plus கட்டணம் இந்தியாவில்... ChatGPT 4 இலவசம்! எது சிறந்தது?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Bing AI, Bing Chat ஆனது ChatGPT Plus அல்லது ChatGPT-4 இன் அடிப்படை தொழில்நுட்பமான GPT-4 மூலம் இலவசமாக பயன்படுத்தலாம் எனக்கூறப்படுகிறது. AI தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்த நிலையில், பல துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதிலும், குறிப்பாக சாட் ஜிபிடி வந்த பிறகு, AI பயன்பாட்டிற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக, GPT-4, ChatGPT Plus., ChatGPT-4 AI சாட்போட்டை இயக்கும் அடிப்படை தொழில்நுட்பம், இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இது பல்வேறு தொழில்முறை மற்றும் கல்விசார் முறைகளில் மனிதர்களை போலவே சிறப்பாக வேலை செய்கிறது.
ChatGPT Plus மற்றும் ChatGPT 4 எது சிறந்தது?
அதேப்போல், ChatGPT Plus சந்தாவும் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது, ஆனால் இதில் பணம் செலுத்த முடியவில்லை என்று சில பயனர்கள் கூறுகின்றனர். OpenAI பிப்ரவரி மாதம் $20க்கு ChatGPT பிளஸ் சந்தாவை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.1650 விலையில் கிடைக்கும் எனக்கூறப்படுகிறது. மேலும், GPT-4 அல்லது ChatGPT-4 இலவசமாகப் பயன்படுத்தும் வழியும் பிறந்துள்ளது. இது குறித்து மைக்ரோசாப்ட் கார்ப்பரேட் துணைத்தலைவர் யூசுப் மெஹ்தி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "புதிய பிங் தளத்தில் GPT-4 கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், தேடலுக்குத் தனிப்பயனாக்கியுள்ளோம்." என்று தெரிவித்துள்ளார். அவரைத்தொடர்ந்து, OpenAI இன் ட்வீட்டிற்கு பதிலளித்த OpenAI இன் CEO, சாம் ஆல்ட்மேன், நிறுவனம் "இந்தியாவை நேசிக்கிறது" என்று கூறினார்.