LOADING...
Google வார்த்தையில் 2 எல் (L) இருக்கிறதா? சாட்ஜிபிடி, குளோட் ஏஐ செய்த சுவாரசிய குளறுபடி!
Google ஸ்பெல்லிங் எண்ணிக்கையில் சாட்ஜிபிடி மற்றும் கிளாட் ஏஐ செய்த தவறு

Google வார்த்தையில் 2 எல் (L) இருக்கிறதா? சாட்ஜிபிடி, குளோட் ஏஐ செய்த சுவாரசிய குளறுபடி!

எழுதியவர் Sekar Chinnappan
May 29, 2026
03:03 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களான சாட்ஜிபிடி மற்றும் கிளாட் ஆகியவை, 'Google' என்ற எளிய வார்த்தையில் உள்ள எழுத்துக்களைத் தவறாகக் கணக்கிட்டுப் பதிலளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பயனர் ஒருவர், 'Google' என்ற வார்த்தையில் எத்தனை 'L' இருக்கிறது எனக் கேட்டதற்கு, இரண்டு ஏஐ தளங்களும் இரண்டு 'L' இருப்பதாக ஒரே மாதிரியான தவறான பதிலை வழங்கின. சாட்ஜிபிடி தனது பதிலில், "Google வார்த்தையின் இறுதியில் இரண்டு L எழுத்துக்கள் அடுத்தடுத்து வருகின்றன" என்று விளக்கமளித்து நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏஐ சாட்பாட் பதில்கள்

தவற்றை ஒப்புக்கொண்ட சாட்பாட்டுகள்: மனித பாணியில் மன்னிப்புக் கேட்ட கிளாட் ஏஐ

"அப்படியென்றால் இரண்டு L இருப்பதாகச் சொல்கிறாயா?" என்று பயனர் மீண்டும் கேட்டதும், சாட்ஜிபிடி உடனடியாகத் தன் தவற்றை உணர்ந்து "என் தவறுதான், அதில் ஒரே ஒரு L மட்டுமே உள்ளது" எனக் கூறியது. தொடர்ந்து கிளாட் ஏஐ தளத்திடம் இதே கேள்வி கேட்கப்பட்டபோது, அதுவும் இரண்டு 'L' இருப்பதாகக் கூறிவிட்டு, பின்னர் மனிதர்களைப் போன்ற தொனியில் மன்னிப்புக் கேட்டது. "என் தவறுதான், நான் எதை நினைத்து அப்படிப் பதிலளித்தேன் என்று எனக்கே தெரியவில்லை" என்று கிளாட் ஏஐ மனிதன் போலப் பேசியதை நெட்டிசன்கள் வியப்புடன் பகிர்ந்து வருகின்றனர்.

தொழில்நுட்பக் குறைபாட்டின் காரணம்

எழுத்துக்களை எண்ணுவதில் எல்எல்எம் தொழில்நுட்பத்திற்கு இருக்கும் சவால்களை விளக்கிய ஏஐ

இந்தத் தவறு குறித்து கிளாட் ஏஐ தளத்திடம் தொழில்நுட்ப விளக்கம் கேட்டபோது, தான் எழுத்துக்களைத் தனித்தனியாகச் சரிபார்க்காமல், மொழியின் இருவேறு பகுதிகளிலிருந்து பதிலளித்ததாகக் குறிப்பிட்டது. ஏஐ சாட்பாட்டுகளின் பின்னணியில் இயங்கும் எல்எல்எம் (LLM) தொழில்நுட்பங்கள், வார்த்தைகளை எழுத்துக்களாகப் பார்க்காமல் டோக்கன்களாக (Tokens) மட்டுமே செயலாக்குவதால் இந்தத் தடுமாற்றம் ஏற்படுகிறது. வார்த்தைகளுக்குள் இருக்கும் எழுத்துக்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிடுவது தற்போதைய எல்எல்எம் தொழில்நுட்பங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதை கூகுள் நிறுவனமும் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.

Advertisement