Page Loader
Mozilla Firefox உலாவியில் பாதுகாப்புக் குறைபாடுகள்? எச்சரிக்கை விடுத்த CERT-In
Mozilla Firefox உலாவியில் பாதுகாப்புக் குறைபாடுகள்?

Mozilla Firefox உலாவியில் பாதுகாப்புக் குறைபாடுகள்? எச்சரிக்கை விடுத்த CERT-In

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 28, 2023
10:12 am

செய்தி முன்னோட்டம்

இந்திய மின்னணு சாதன மற்றும் இணையப் பயனாளர்களை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, பல்வேறு வகையில் பயனாளர்களின் சாதனங்களில் இருக்கக்கூடிய கோளாறுகள் குறித்து தெரியப்படுத்துவது இந்திய கணினி அவசரகால பதில் குழுவின் (CERT-In) வழக்கம். அப்படி தற்போது அதிக இந்திய பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மொஸில்லா ஃபையர்பாக்ஸ் (Mozilla Firefox) செயலியின் சில வெர்ஷன்களில் உள்ள கோளாறுகள் குறித்து பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது CERT-In. மொஸில்லா ஃபையர்பாக்ஸ் செயலியில் உள்ள இந்தக் கோளாறுகளின் உதவியுடன், ஹேக்கர்கள் பயனாளர்களின் மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தங்களது இணையப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது இந்திய கணினி மற்றும் இணையப் பாதுகாப்பு அமைப்பு.

தகவல் பாதுகாப்பு

பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்: 

மொஸில்லா ஃபையர்பாக்ஸ் சேவையில் குறிப்பிட்ட மென்பொருள் வெர்ஷன்களில் மட்டுமே மேற்கூறிய வகையிலான பாதுகாப்புக் கோளாறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது CERT-In. அதன்படி, Firefox ESR-ன் வெர்ஷன் 115.5.0 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள், Firefox IOS வெர்ஷன் 120 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள் மற்றும் Mozilla Thunderbird வெர்ஷன் 115.5 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்களில் பாதுகாப்புக் கோளாறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது இந்திய சைபர் பாதுகாப்பு அமைப்பு. பாதுகாப்பு கோளாறுகளால் பயனாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அனைவரையும் சமீபத்திய ஃபையர்பாக்ஸ் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யக் கோரியும் கேட்டுக் கொண்டிருக்கிறது CERT-In. மேலும், அனைத்து விதமான செயலிகளையும் அவ்வப்போது அப்டேட் செய்வதன் மூலம் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.