LOADING...
உங்க லேப்டாப் ஹேக் ஆகலாம்; ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க கூகுள் குரோம் பயனர்கள் உடனே இதை செய்யுங்கள்

உங்க லேப்டாப் ஹேக் ஆகலாம்; ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க கூகுள் குரோம் பயனர்கள் உடனே இதை செய்யுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 16, 2026
06:09 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரக்கால பதிலளிப்புக் குழு (CERT-In), கூகுள் குரோம் பயனர்களுக்கு அதீத ஆபத்து குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. விண்டோஸ், மேக் ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் செயல்படும் கூகுள் குரோம் பிரவுசர்களில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் உங்கள் கணினியைத் தூரத்திலிருந்தே கட்டுப்படுத்த முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு

பாதிப்பு என்ன?

இந்தக் குறைபாடானது 'யூஸ்-ஆஃப்டர்-ப்ரீ' (Use-after-free) எனப்படும் தொழில்நுட்பக் கோளாறு ஆகும். இது குரோம் பிரவுசரின் சிஎஸ்எஸ் ரெண்டரிங் பகுதியில் உள்ளது. ஹேக்கர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சில இணையதளப் பக்கங்கள் மூலம் உங்கள் பிரவுசரைத் தாக்கி, உங்கள் அனுமதியின்றி மென்பொருள்களை இயக்கவோ அல்லது உங்கள் தனிப்பட்ட தரவுகளைத் திருடவோ முடியும். இதனால் உங்கள் கணினி முழுமையாக ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு செல்லும் அபாயம் உள்ளது.

வெர்ஷன்கள்

பாதிக்கப்பட்ட வெர்ஷன்கள்

கீழ்க்காணும் பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனர்கள் உடனடியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: விண்டோஸ் மற்றும் மேக் ஓஎஸ்ஸில் 145.0.7632.75/76 க்கு முந்தைய வெர்ஷன்கள். லினக்ஸ் ஓஎஸ்ஸில் 144.0.7559.75 க்கு முந்தைய பதிப்புகள். நீங்களும் பழைய பதிப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் சமூக வலைதள கணக்குகள் திருடப்பட அதிக வாய்ப்புள்ளது.

Advertisement

பாதுகாப்பு

பாதுகாப்பு நடவடிக்கைகள்

இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கப் பயனர்கள் உடனடியாகத் தங்களது கூகுள் குரோம் பிரவுசரை ஸ்டேபிள் சேனல் மூலம் வெளியிடப்பட்டுள்ள புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும். அப்டேட் செய்யும் முறை: குரோம் பிரவுசரைத் திறந்து, மேலேயுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, 'Help' பகுதிக்குச் சென்று 'About Google Chrome' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு புதிய அப்டேட் தானாகத் தரவிறக்கம் ஆகும். அதன் பிறகு பிரவுசரை 'Relaunch' செய்யவும். பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் நிபுணர்கள், சைபர் தாக்குதல்களைத் தவிர்க்க மென்பொருள்களை எப்போதும் உடனுக்குடன் அப்டேட் செய்வதே சிறந்த வழி என்று அறிவுறுத்துகின்றனர்.

Advertisement