
ஹாலிவுட் ஏஜென்சி CAA,பிரபலங்களுக்கு AI பாதுகாப்பு சேவைகளை வழங்குகிறது
செய்தி முன்னோட்டம்
கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்சி (CAA), அமெரிக்காவை தளமாகக் கொண்ட பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு திறன் ஏஜென்சி, பிரபலங்களுக்கு AI பாதுகாப்பு சேவைகளை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த ஏஜென்சி "theCAAvault" என்ற மெய்நிகர் மீடியா சேமிப்பகத்தை (Virtual Media Storage) வசதியை உருவாக்கியுள்ளது.
அங்கு செலிபிரிட்டிகள் தங்கள் டிஜிட்டல் சொத்துக்களை பாதுகாப்பாக சேமிக்க முடியும்.
இந்த சொத்துகளில் பெயர்கள், படங்கள், டிஜிட்டல் ஸ்கேன்கள் மற்றும் குரல் பதிவுகள் ஆகியவை அடங்கும்.
பிரபலங்களின் டிஜிட்டல் உருவங்களை அவர்களின் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ஒத்துழைப்பு
டிஜிட்டல் சொத்து மேலாண்மைக்கு வெரிடோனுடன் கூட்டு
இந்த டிஜிட்டல் சொத்து மேலாண்மை தீர்வை வழங்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான வெரிடோனுடன் CAA இணைந்துள்ளது.
பெரும்பாலும் பிரபலங்களின் அனுமதியின்றி உருவாக்கப்படும் AI டீப்ஃபேக்குகளின் அதிகரிப்புக்கு மத்தியில் இந்த புதிய கூட்டாண்மை துவக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரபல நடிகரும் CAA வாடிக்கையாளருமான டாம் ஹாங்க்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க சம்பவத்தில், அவரது AI-உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று அவரது சம்மதமின்றி பல் மருத்துவத் திட்டத்தை விளம்பரப்படுத்த தவறாகப் பயன்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
வால்ட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் AI டிஜிட்டல் சொத்துக்களை பாதுகாப்பான தனிப்பட்ட மையத்திற்குள் சேமிக்க அனுமதிக்கிறது.
இதனை அங்கீகரிக்கப்பட்ட பயனர்களால் மட்டுமே அணுக முடியும்.இந்த அம்சம் அவர்கள் விரும்பும் வகையில் அவர்களின் உள்ளடக்கத்தைப் பகிரவும் பணமாக்கவும் உதவுகிறது.