Page Loader
பிஎஸ்என்எல்-இன் அற்புதமான ரூ. 87 திட்டம் - இவ்வளவு சலுகைகளா?
Bsnl-இன் அசத்தலான இரண்டு ரீச்சார்ஜ் திட்டம் இங்கே

பிஎஸ்என்எல்-இன் அற்புதமான ரூ. 87 திட்டம் - இவ்வளவு சலுகைகளா?

எழுதியவர் Siranjeevi
Mar 20, 2023
09:02 am

செய்தி முன்னோட்டம்

தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தன பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், புதிய ரூ. 87 சலுகை பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த கால வேலிடிட்டி கொண்ட இந்த சலுகை வாய்ஸ் கால் மற்றும் டேட்டா போன்ற பலன்களை வழங்குகிறது. ஏற்கனவே, இந்த சலுகை வழங்கப்பட்டு வருவதால், பலரும் இதனை ஏற்கனவே பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் தான்.

பிஎஸ்என்எல் ரீச்சார்ஜ்

BSNL-இன் சூப்பரான இரண்டு திட்டங்கள் - எது சிறந்தது?

ரூ. 87 திட்டத்தின் பலன்கள் என்னென்ன? BSANL ரூ.87 சலுகை ஆனது, மொத்தம் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இச்சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஹார்டி மொபைல் கேம்ஸ்-இன் கேமிங் பலன்கள் வழங்கப்படுகிறது. மேலும், இந்த சலுகை மொத்தத்தில் பயனர்களுக்கு 14 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஒருவேளை தினமும் 1 ஜிபி டேட்டா போதாத என்ற வகையில், பயனர்கள் ரூ. 97 விலை சலுகையை தேர்வு செய்யலாம். தொடர்ந்து, இது 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதில் பயனர்கள் மொத்தத்தில் 30 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.