மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
செய்தி முன்னோட்டம்
பல உலக நாடுகளில் பூகம்பம் மற்றும் புயல், மழை வெள்ளம், போன்ற பேரழிவுகள் ஏற்படுகின்றன.
ஆனால் இந்த பேரழிகள் எல்லாம் இதுவரை பிரிட்டனை தாக்கியது இல்லை எனவும், ஆனால் எந்த நேரத்திலும் மெகா சுனாமி தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அதன்படி, இங்கிலாந்து நாட்டு அரசங்கத்தின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் மெகா சுனாமி சர் டேவிட் கிங், என்பவர் மெகா சுனாமி கேனரி தீவுகளில் நிலச்சரிவினால் தூண்டப்பட்ட ஒரு பெரிய நீர்ச்சுவர் இங்கிலாந்தில் மோதலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் பல மீட்டர் உயரம் உள்ள சுனாமி ஆனது இங்கிலாந்தின் கடற்கரைக்கு உள்ளேயும் அதற்கு அப்பாலும் பல நகரங்களை அதன் பாதையில் கொண்டு செல்லும் என கூறியுள்ளார்.
மெகா சுனாமி
மெகா சுனாமியால் இங்கிலாந்து எப்படி பாதிப்பு உண்டாகும்?
அலை கடக்க ஆறு மணி நேரம் ஆகும் என கூறியுள்ளார். இந்த மெகா சுனாமி பாதிப்பால் லண்டனும் பாதிக்கப்படும் எனக்கூறியுள்ளார்.
அப்படி ஒரு வேளை லண்டனை தாக்கினால் பெரிய தாக்கமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.
இதனிடையே இப்படி ஒரு சம்பவம் நடக்காது என பலரும் கூறி வருகின்றனர். மெகா சுனாமி ஆனது எத்தனை வருடங்கள் கழித்து வேண்டுமானாலும் வரலாம் இயற்கையின் பேரழிவை சரியாக கணிக்க முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும், மெகா சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அரிதானவை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகைத் தாக்கும் என கூறுகின்றனர்.