ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய புளூஸ்கை - பீட்டாவில் அறிமுகம்!
ட்விட்டருக்குப் போட்டியாக டிவிட்டர்-இன் நிறுவனரும், முன்னாள் சிஇஓ-வுமான ஜாக் டோர்சி புதிதாக ஒரு சமுக வலைத்தள நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். உலகளவில் அனைத்து முன்னணி சமுக வலைத்தள நிறுவனங்களும் மோசமான நிலையை எட்டி வரும் நிலையில், ஜாக் டோர்சி இதுவரையில் யாரும் செய்திடாத வகையில் புத்தம் புதிய ஐடியா உடன் தனது புதிய சமூகவலைத்தள நிறுவனத்தை உருவாக்கி வருகிறார். அதன்படி, ஜாக் டோர்சியின் ப்ளூஸ்கியை அதன் சோதனைக் கட்டத்தில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அறிமுகம் செய்துள்ளனர். அந்த செயலியின் பீட்டா வெர்ஷன் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு முன் ப்ளூஸ்கி குழு தனது அக்டோபர் 2022 ட்விட்டரில் மாற்று புதுப்பிக்களை பகிர்ந்திருந்தது.
ட்விட்டரை கவிழ்க்க களமிறங்கிய Bluesky - செயல்பாடுகள் என்ன?
எனவே, data.ai இன் படி, ப்ளூஸ்கி பிப்ரவரி 17 அன்று iOS ஸ்டோரில் தொடங்கப்பட்டதிலிருந்து குறைந்தது 2,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 'புளூஸ்கை' என்ற பெயரில் ஒரு சமூக வலைதளம் 2019இல் டுவிட்டரால் நிறுவப்பட்டது. இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், புளூஸ்கை ஒரு கூட்டமைப்பான சமூக வலைத்தள செயலியாக உள்ளது. வழக்கமாக ஒரே தளத்தில் இயக்கப்படுவதற்கு பதிலாக இது பல தளங்களால் இயக்கப்படுகிறது. எந்தவொரு நிறுவனமும் அதைப் பயன்படுத்தும் நபர்களின் தரவை சொந்தமாக்க முயற்சிக்கிறதோ அவற்றிற்கு போட்டியாக புளூஸ்கை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.