ஒரே ஒரு பரிவர்த்தனையில் $2.5 பில்லியன் சுருட்டல்: EIP-7702 அப்கிரேடை பயன்படுத்தி நடத்தப்பட்ட பைனான்ஸ் கிரிப்டோ தாக்குதல்
செய்தி முன்னோட்டம்
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான பைனான்ஸ் எக்ஸ்சேஞ்சில் இருந்து சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ₹52,000 கோடிக்கும் மேல்) மதிப்புள்ள கிரிப்டோ சொத்துக்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச நிதி மற்றும் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தேரியம் நெட்வொர்க்கின் அண்மைய அப்கிரேடான 'EIP-7702' என்ற அம்சத்தைப் பயன்படுத்தி, மிகவும் நுட்பமான முறையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
EIP-7702
EIP-7702 அம்சம் ஆயுதமாக்கப்பட்டது எப்படி?
கிரிப்டோ வாலட்களின் பயன்பாட்டை எளிமையாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட EIP-7702 அம்சம், ஒரு கணக்கின் சார்பில் நிதியை மாற்றுவதற்கான அனுமதியை மற்றொரு சாஃப்ட்வேருக்கு வழங்க அனுமதிக்கிறது.
இந்த அம்சத்தையே ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
ஹேக்கர்கள் வெறும் $15 (சுமார் ₹1,250)நெட்வொர்க் கட்டணத்தைச் செலுத்தி, EIP-7702 அனுமதியைச் செயல்படுத்தியுள்ளனர்.
Blockaid பாதுகாப்பு நிறுவனத்தின் அறிக்கையின்படி, அனுமதி கிடைத்தவுடன் ஒரே ஒரு பரிவர்த்தனை மூலம் $2.5 பில்லியன் சொத்துக்களை ஹேக்கர்கள் தங்களது கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.
இது மொத்தக் கொள்ளையடிக்கப்பட்ட தொகையில் 40% ஆகும்.
அதே அனுமதியை பயன்படுத்தி ஹேக்கர்கள் 1,67,464 Ether நாணயங்கள் மற்றும் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெதர் உட்பட 60-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டோக்கன்களைத் திருடியுள்ளனர். மொத்தம் $3.6 பில்லியன் சுருட்டப்பட்டுள்ளது.
பைனான்ஸ் 14
'பைனான்ஸ் 14' ஹாட் வாலட் இலக்கு
வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகளுக்காக பைனான்ஸ் பயன்படுத்தி வந்த 'Binance 14' என்ற ஹாட் வாலட்டை ஹேக்கர்கள் துல்லியமாகக் குறிவைத்துள்ளனர்.
சாதாரணச் சூழலில் இவ்வளவு அதிகமான மற்றும் பல்வேறு வகையான டோக்கன்களை மாற்றப் பல தனித்தனி பரிவர்த்தனைகள் தேவைப்படும்.
ஆனால் EIP-7702 அம்சம் ஹேக்கர்களுக்கு மிக எளிய குறுக்குவழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அக்டோபர் 29 அன்று UTC நேரப்படி இரவு 8:20 மணிக்குச் செல்லுபடியாகும் டிஜிட்டல் கையொப்பம் மூலம் ஹேக்கர்கள் தங்கள் குறியீட்டை இணைத்து, அடுத்த 3.5 நிமிடங்களில் இந்த தாக்குதலை நடத்தி முடித்துள்ளனர்.
தடுப்பு நடவடிக்கைகள்
பைனான்ஸ் நிறுவனத்தின் விளக்கம்
சமூகப் பொறியியல், ஹேக் செய்யப்பட்ட சாதனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உத்திகளை உள்ளடக்கிய மிகவும் அதிநவீன, பல கட்டத் தாக்குதலின் ஒரு பகுதியாகவே இது நடந்துள்ளது என பைனான்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஹேக்கிங்கைத் தொடர்ந்து பைனான்ஸ் தளம் உடனடியாகப் பணப் பரிவர்த்தனைகளை முடக்கியபோதிலும், எத்தேரியம் நெட்வொர்க்கில் EIP-7702 அனுமதி தீவிரமாகவே இருந்ததால் ஹேக்கர்களால் தொடர்ந்து நிதியை மாற்ற முடிந்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட வாலட் உள்கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைத்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக் கட்டுப்பாடுகளைப் பலப்படுத்தியுள்ளதாக பைனான்ஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.