
இந்தியாவில் BGMI சர்வர்கள் செயல்பாட்டிற்கு வந்தன.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது விளையாட்டு நிறுவனம்!
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு சில காரணங்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட BGMI (Battlegrounds Mobile India) ஸ்மார்ட்போன் கேமானது, கடந்த வாரம் இந்தியாவில் மீண்டும் வெளியிடப்பட்டது.
எனினும், இந்தியாவில் உள்ள தங்களுடைய சர்வர்களை கடந்த வாரம் அந்நிறுவனம் செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. எனவே, புதிய கேமை பதிவிறக்கம் செய்த பயனர்களாலும் அதனை விளையாட முடியவில்லை.
ஆனால், தற்போது இந்தியாவில் இருக்கும் தங்கள் கேம் சர்வர்கள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாவும், இந்திய ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயனர்கள் அதனை தரவிறக்கம் செய்து விளையாடலாம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது அந்த கேமை உருவாக்கிய கிராஃப்டான் நிறுவனம்.
2020-ல் இந்திய அரசால் பப்ஜி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2021-ல் இந்திய பயனர்களுக்காகவே BGMI என்ற புதிய விளையாட்டு அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.
BGMI
என்னென்ன மாற்றங்கள்:
11 இடங்களைக் கொண்ட 'நூஸா' என்ற புதிய மேப்பை BGMI-ல் அறிமுகப்படுத்தியிருக்கிறது கிரஃப்டான். NS2000 ஷாட்கன் மற்றும் புதிய கிராஸ்போ ஆயுதங்களை இந்த மேப்பில் மட்டும் பயன்படுத்தும் வகையில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
மேலும், தற்போது 18 வயதுக்கு கீழ் இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் தங்களுடைய கண்காணிப்பாளரின் உதவியுடனேயே பதிவு செய்து OTP-யை அளித்து விளையாட முடியும் எனத் தெரிவித்திருக்கிறது கிராஃப்டான்.
18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே விளையாட முடிந்த வகையில் புதிய மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறது.
அதோடு, ஒரு நாளைக்கு ரூ.7,000 வரை மட்டுமே இனி இந்த விளையாட்டினுள் செலவழிக்க முடியும். பயனர்கள் விளையாட்டினுள் அதிகமாக செலவழிப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கையாம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Hello BGMI fans!
— Battleground Mobile India (@BattleGames_Ind) May 29, 2023
Game is live now & available to play , Collect all the rewards now! #BGMI #IndiaKiHeartbeat pic.twitter.com/Us8DJdxsPQ