இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன்கள் இன்று ஆடம்பரத்திலிருந்து அத்தியாவசியமாகிவிட்டது. ஸ்மார்ட்போனைக் கொண்டே அனைத்து விதமான வேலைகளையும் நொடி நேரத்தில் நம்மால் செய்து முடித்து விட முடியும். விலை அதிகமான ஸ்மார்ட்போன்களுக்கு இடையில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை ஸ்மார்ட்போன்களும் சந்தையில் இருக்கின்றன. அப்படி ரூ.10,000 விலைக்குள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனையாகி வரும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இது. போகோ C55 (Poco C55): 6.71 இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ G85 ப்ராசஸர், 50MP முதன்மைக் கேமரா, 5,000 mAh பேட்டரி, லெதர் பினிஷ் கொண்ட பின்பக்கம் ஆகிய பல்வேறு வசதிகளைக் கொண்ட போகோ C55 ஸ்மார்ட்போனானது, ரூ.7,999 விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், 5G வசதி இல்லை.
மோட்டோ E13 (Moto E13):
6.5-இன்ச் டிஸ்பிளே, யுனிசாக் T606 ப்ராசஸர், 13MP பின்பக்ககேமரா, ஆண்ட்ராய்டு 13 கோ இயங்குதளம் மற்றும் 5,000 mAH பேட்டரி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது மோட்டோ E13 ஸ்மார்ட்போன். 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.6,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லாவா பிளேஸ் 2 5G (Lava Blaze 2 5G): 90Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.5 இன்ச் டிஸ்பிளே, 50MP+0.8MP டூயல் கேமரா செட்டப், மீடியாடெக் D6020 ப்ராசஸர் மற்றும் 5,000 mAh பேட்டரி உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கிறது லாவா பிளேஸ் 2. 5G வசதி இந்த ஸ்மார்ட்போன் மாடலானது இந்தியாவில் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி M04 (Samsung Galaxy M04):
6.5-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ P35 ப்ராசஸர், 13MP முதன்மை கேமரா, 2MP டெப்த் சென்சார், சாம்சங் ஒன் UI மற்றும் 5,000 mAh பேட்டரி ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது இந்த கேலக்ஸி M04. இந்த ஸ்மார்ட்போன் மாடலானது இந்தியாவில் ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போகோ M6 ப்ரோ 5G (Poco M6 Pro 5G): 6.79-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 50MP முதன்மை கேமரா மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த போகோ M6 ப்ரோ. 5G வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.