ஆக்சிஸ்-சிட்டி பேங்க் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன?
இந்தியாவில் உள்ள சிட்டி வங்கியின் நுகர்வோர் வணிகமானது மார்ச் 1, 2023 முதல் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றப்படுகிறது. இதனால், இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் துறை வங்கியான சிட்டி பேங்க் இந்தியா மற்றும் அதன் வங்கி அல்லாத நிதிப் பிரிவான சிட்டி கார்ப் ஃபைனான்ஸ் (இந்தியா) ஆகியவற்றின் நுகர்வோர் வணிகங்களை கையகப்படுத்துவதை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் சிட்டி பேங்க் இந்தியா தனது இணையதளத்தில் அதன் நுகர்வோர் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆக்சிஸ் வங்கி மூலம் சேவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், இது சுமார் 11,603 கோடி ரூபாய்க்கு மார்ச் 1, 2023 அன்று பங்குச் சந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டது.
சிட்டி பேங்க் ஆக்சிஸ் பேங்க் கூட்டணி - வாடிக்கையாளர்களுக்கு உண்டான மாற்றம் என்ன?
இவை, கிரெடிட் கார்டுகள், வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் சில்லறை வங்கி சேவைகள் போன்றவற்றை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சிட்டி வங்கியை விட ஆக்சிஸ் வங்கி விகிதங்களுக்கு ஏற்ப சேமிப்பு வங்கிக் கணக்கில் அதிக வட்டி விகிதம் ஏற்படும். தொடர்ந்து, சிட்டி பேங்க் ஏடிஎம்களில் கிடைக்கும் இலவசப் பரிவர்த்தனைகள் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்களுக்கும் நீட்டிக்கப்படும். Citi கிரெடிட் கார்டுக்குவட்டி விகிதத்திலோ அல்லது பிற கட்டணங்களிலோ எந்த மாற்றமும் இருக்காது. வீட்டுக் கடனுக்கு இன்று நான் செலுத்தும் வட்டி மாறுமா? உங்கள் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது. உங்கள் கடனுக்கான வட்டி விகிதம் மாறக்கூடியதாக இருந்தால், எந்த மாற்றமும் முன் அறிவிப்புடன் தெரிவிக்கப்படும் என்று சிட்டி வங்கி தெரிவித்துள்ளது.