
பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி
செய்தி முன்னோட்டம்
ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொள்வதற்காக இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று(மார் 2) புது டெல்லி வந்தடைந்தார்.
அதன்பின், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அவரை வரவேற்றார்.
புதுடெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் பலதரப்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
எட்டாவது ரைசினா உரையாடலின் தொடக்க அமர்வில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமை விருந்தினராகவும், முக்கிய பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.
மார்ச் 2 முதல் 4 வரை அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனுடன்(ORF) இணைந்து இந்த நிகழ்வை வெளியுறவுதுறை அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.
இதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
பிரதமர் மோடியை சந்தித்த இத்தாலிய பிரதமர்
#WATCH | Delhi: PM Narendra Modi welcomes Italian PM Giorgia Meloni to India
— ANI (@ANI) March 2, 2023
(Source: DD News) pic.twitter.com/yb5Awj3fu6