Page Loader
ASUS ROG Phone 7, 7 Pro - முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளது
ASUS ROG Phone 7, 7 ப்ரோ - முக்கியம் அம்சங்கள் வெளியீடு

ASUS ROG Phone 7, 7 Pro - முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளது

எழுதியவர் Siranjeevi
Apr 10, 2023
05:31 pm

செய்தி முன்னோட்டம்

ASUS ROG ஸ்மார்ட்போன் 7, 7 ப்ரோ மாடல்களை ஏப்ரல் 13 அன்று வெளியிடுகிறது. இந்த போன் இது மிகவும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போனாக அறிமுகமாகவுள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக, ROG Phone 7 மற்றும் 7 Pro மாடல்களுக்கான ரெண்டர்களை டிப்ஸ்டர் Evan Blass வெளிப்படுத்தியுள்ளார். இந்த போனில் பின்புறம் மூன்று கேமராக்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் இடம்பெறுகிறது. வலது பக்கம் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் இடம்பெறும். ASUS ROG Phone 7 ஆனது 6.78-இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளேவுடன் 165Hz புதுப்பிப்பு வீதம், HD+ தெளிவுத்திறனுடன், அண்டர்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ASUS ROG Phone 7 ஸ்மார்ட்போன்

ASUS ROG Phone 7, 7 PRO - முக்கிய அம்சங்கள் என்னென்ன இடம்பெற்றுள்ளது

ROG மாடல்கள் 3.19GHz வேகத்தில் இயங்கும் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 சிப்செட்டை கொண்டிருக்கும். மேலும், கேமிங்கின் போது மாட்யூல் ஸ்மார்ட்போனில் உருவாகும் வெப்பத்தை குறைக்க உதவி செய்து போனை குளிரூட்டத் தொடங்குகிறது. ROG ஸ்மார்ட்போன் 7 சீரிஸ் 50MP மெயின் ஷூட்டர், 13MP அல்ட்ரா-வைட் ஸ்னாப்பர் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைப் பெறலாம். இரண்டு மாடல்களிலும் 12MP செல்ஃபி கேமரா எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் 24fps இல் 8K வீடியோக்களை பதிவு செய்ய முடியும். 18ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை சேமிப்பகத்தை எதிர்பார்க்கிறோம். இவை 65W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. விலையை பொறுத்தவரையில் ROG ஃபோன் 7 ரூ. 47,500 தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.