ஆப்பிள் பயனர்களை குறி வைக்கும் அதிநவீன ஃபிஷிங் தாக்குதல்கள்
அதிகரித்து வரும் அதிநவீன ஃபிஷிங் தாக்குதல்களின் சமீபத்திய டார்கெட், ஆப்பிள் பயனர்கள். ஆப்பிள் ஐடி கடவுச்சொற்களை மீட்டமைக்க பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை வருகிறது. அதில், 'Allow" அல்லது "Dont Allow" என்பதைத் தேர்வுசெய்யும் வரை அந்த எச்சரிக்கை வருகிறது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பயனர்கள்,"Dont Allow" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ததும், மோசடி செய்பவர்கள் தொலைபேசி அழைப்புகள் மூலம் ஆப்பிள் கஸ்டமர் கேரிலிருந்து அழைப்பது போல பயனர்களை தொடர்பு கொள்கின்றனர். கூடுதலாக, அவர்கள் ஆப்பிள் வாடிக்கையாளர் ஆதரவு எண்ணைக் காட்டும் வகையில் காலர் ஐடியையும் மாற்றியமைத்துள்ளனர். இது குறித்து, Jamf போர்ட்ஃபோலியோ வியூகத்தின் துணைத் தலைவர் மைக்கேல் கோவிங்டன் கூறுகையில், இதனை MFA (மல்டி-ஃபாக்டர் அதென்டிகேஷன்) குண்டுவெடிப்பு என்று குறிப்பிடுகிறார்.
'MFA குண்டுவெடிப்பு அச்சுறுத்தல்' என குறிப்பிடும் நிபுணர்கள்
மைக்கேல் கோவிங்டன் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பயனர்கள் ஒரு முறை சமரசம் செய்ததும், அவர்கள் மொபைலில் இருந்து டேட்டாக்கள் சுரண்டப்படும் வரை, இந்த தாக்குதல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்கிறார். இதை சமாளிக்க, 'MFA குண்டுவெடிப்பு வரிசை' தொடங்கியவுடன், பயனர்கள் தங்கள் இரண்டாவது அங்கீகரிப்பு- PIN குறியிடை பாதுகாப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். இந்த அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க, ஆப்பிள் மென்பொருளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும், தேவைப்படும் போதெல்லாம் வாடிக்கையாளர் ஆதரவை முன்கூட்டியே அணுகவும் அறிவுறுத்துகிறார். அதோடு, வாடிக்கையாளர் ஆதரவிலிருந்து அழைப்புகளைப் பெறும்போது சரிபார்ப்பு கேள்விகளை கேட்கவும் அவர் பரிந்துரைக்கிறார்.