2024-ல் ஐபேடு லைன்அப்பை மொத்தமாக அப்டேட் செய்யும் ஆப்பிள்?
2010ம் முதன் முதலில் ஐபேடுகளை வெளியிட்டதில் இருந்து இந்த 2023ம் ஆண்டு தான் புதிய ஐபேடுகள் அல்லது ஐபேடு அப்கிரேடுகள் எதையும் ஆப்பிள் வெளியிடவில்லை. ஆனால், இதற்கெல்லாம் சேர்த்து வைத்து 2024ம் ஆண்டு தங்களுடைய லைன்அப்பில் இருக்கும் அனைத்து ஐபேடுகளை ஆப்பிள் அப்கிரேடு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஐபேடு ஏர், ஐபேடு ப்ரோ, ஐபேடு 10th ஜென் மற்றும் ஐபேடு மினி என அனைத்து ஐபேடு மாடல்களையும் அப்டேட் செய்யவிருக்கிறது ஆப்பிள். ஐபேடு மினியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆப்பிள் அப்டேட் செய்தது குறிப்பிடத்தக்கது. ஐபேடு அப்டேட்களைத் தவிர்த்து, புதிய ஐபேடுகளின் அறிமுகத்தையும் அடுத்த ஆண்டும் ஆப்பிளிடம் நாம் எதிர்பார்க்கலாம்.
ஆப்பிளின் 'மெகா' ஐபேடு அப்டேட்:
அடுத்த ஆண்டு முதல் பாதியிலேயே புதிய ஐபேடு அப்டேட் மற்றும் புதிய ஐபேடுகளை நாம் எதிர்பார்க்கலாம். முக்கியமா M3 சிப் மற்றும் OLED திரையுடன் கூடிய புதிய 11 இன்ச் மற்றும் 13 இன்ச் ஐபேடு ப்ரோ மாடல்களையும் ஆப்பிள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த ஐபேடு ஏரில் M2 சிப்பும், ஐபேடு மினியில் A16 பயானிக் சிப்பும் பயன்படுத்தப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஐபேடுகளைத் தவிர்த்து புதிய குறைந்த விலை கொண்ட ஏர்பாடுஸ் மாடல் ஒன்றையும் அடுத்த ஆண்டு ஆப்பிள் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 2025ம் ஆண்டே ஏர்பாட்ஸ் ப்ரோவின் புதிய அப்டேட்டை நாம் எதிர்பார்க்க முடியும்.