
ஆப்பிள் டெவலப்பர்கள் WWDC 2023 நிகழ்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
பிரபல முன்னனி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு ஆனது ஜூன் மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிகழ்வானது virtual முறையில் நடைப்பெறுவதாகவும் ஜூன் 5 தொடங்கி ஜூன் 9 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது.
எனவே இதுவரை நடந்த டெவலப்பர்கள் நிகழ்வுகளிலேயே இது மிகவும் பெரியது எனவும் அதிகம் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக WWDC 2023 இருக்கும் என ஆப்பிள் டெவலப்பர் துணை தலைவர் சூசன் பிரிஸ்காட் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் முக்கியமாக ஆப்பிள் புதிய அம்சங்கள் நிறைந்த ஐஒஎஸ் 17 வெர்ஷனை அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
இதுமட்டுமின்றி, புதிய IOS, MacOS, ipad Os, WatchOS உள்ளிட்டவைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர தொடக்க நிகழ்வு ஜூன் 5 தொடக்கம்
Apple Announces WWDC 2023 Event Taking Place June 5 to 9 https://t.co/riOzm0tJ1G by @julipuli pic.twitter.com/qGLMaGw1YG
— MacRumors.com (@MacRumors) March 29, 2023