Page Loader
திடீரென ஐபோன் IOS-16 Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் - காரணம் என்ன?
ஐஓஎஸ் 16 இருந்து Live Wallpaper-ஐ நீக்கியது ஆப்பிள் நிறுவனம்

திடீரென ஐபோன் IOS-16 Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் - காரணம் என்ன?

எழுதியவர் Siranjeevi
Mar 02, 2023
05:55 pm

செய்தி முன்னோட்டம்

ஐபோன் பயனர்கள் மத்தியில் லைவ் வால்பேப்பர் அம்சம் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. இதனிடையே, ஐஒஎஸ் 16-இல் இது திடீரென நீக்கப்பட்டு விட்டது. எதற்காக லைவ் வால்பேப்பர் அம்சம் நீக்கப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டு உள்ளது. இந்த கேள்விக்கு, யூடியூபர் கிரெக் யாட் பதில் அளித்து இருக்கிறார். அதில் லாக் ஸ்கிரீனில் வால்பேப்பரை கொண்டு செல்வதற்கான ஜெஸ்ட்யூர் சார்ந்தது என அவர் தெரிவித்து இருக்கிறார். ஆப்பிள் நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு முன் ஐஒஎஸ் 11-இல் முதல் முறையாக லைவ் வால்பேப்பர் அம்சத்தை கொண்டு வந்தது. தற்போது ஐஒஎஸ் 16-இல் அதனை நீக்கி உள்ளது. இதில் லைவ் வால்பேப்பர் உடன் டைனமிக் வால்பேப்பர்களும் இடம்பெற்று இருந்தது.

ஆப்பிள் நிறுவனம்

Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் நிறுவனம் - இப்படி ஒரு காரணமா?

தொடர்ந்து, ஐபோனில் கஸ்டம் லாக் ஸ்கிரீனை ஆக்டிவேட் செய்யவோ அல்லது முழுமையாக நீக்கவோ ஆப்பிள் புதிய ஜெஸ்ட்யூர் ஒன்றை சேர்க்க வேண்டும். இதனால், அழுத்தி பிடிக்கும் போது லாக் ஸ்கிரீன் இண்டர்ஃபேஸ் செயல்படுத்தப்படும். பல்வேறு அம்சங்களிடையே ஆப்பிள் நிறுவனம் சீராக இயங்குவதற்கு மதிப்பு கொடுக்கும். அந்த வகையில், லைவ் வால்பேப்பர் அம்சத்தை அழிக்கும் முன் இந்த அனுபவத்தை ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் வழங்கியது. முக்கியமாக பலர் லைவ் அல்லது டைனமிக் வால்பேப்பர் அம்சங்களை கடந்த சில ஆண்டுகளாகவே பயனர்கள் பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது.