வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 ஸ்மார்ட்வாட்ச்களை வெளியிட்டது ஆப்பிள்
செய்தி முன்னோட்டம்
புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் தங்களுடைய வருடாந்திர நிகழ்வுகளுள் ஒன்றான வொண்டர்லஸ்ட் நிகழ்வை தற்போது நடத்தி முடித்திருக்கிறது ஆப்பிள். இந்த நிகழ்வில், புதிதாக இரண்டு ஸ்மாட்ர்வாட்ச்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ஆகிய இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.
ஆன்-டிவைஸ் சிரி மற்றும் கெஸ்டர் கண்ட்ரோல்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளை தங்களுடை இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களிலும் கொடுத்திருக்கிறது ஆப்பிள்.
மேலும் புதிய மேம்படுத்தப்பட்ட சென்சார்களுடன், உடல் நலக் கண்காணிப்பு வசதியையும் மேம்படுத்தியிருக்கிறது ஆப்பிள். என்னென்ன வசதிகளுடன், என்ன விலையில் வெளியாகியிருக்கிறது ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்கள்?
ஆப்பிள்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9ல் கெஸ்டர் கண்ட்ரோல்கள்:
புதிய வாட்ச் சீரிஸ் 9ல், புத்தம் புதிய S9 சிப்பைப் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். 4 நியூரல் கோர்களைக் கொண்டிருக்கும் இந்த S9 சிப்பானது, முந்தைய சிப்பின் GPUவை விட 30% வேகமாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
புதிதாக கெஸ்டர் கண்ட்ரோல்கள் என்ற வசதியை புதிய வாட்ச் சீரிஸ் 9ல் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். நமது கையின் அசைவுகளைக் கொண்டே வாட்சில் சில செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு, அழைப்புகளை ஏற்பது, புகைப்படம் எடுப்பது, அலாரத்தை ஸ்னூஸ் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளை செய்யமுடியும்.
வாட்ச்சில் உள்ள அனைத்து சென்சார்களின் தகவல்கள் மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு நமது கையின் அசவுகளைக் கணித்து அதற்கேற்ப புதிய வாட்ச் செயல்படும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
ஆப்பிள்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9: விலை
மேற்கூறிய கெஸ்டர் கண்ட்ரோல் வசதியை அடுத்த மாதம் வெளியிடவிருக்கும் சாஃப்ட்வேர் அப்டேட்டுடன் வெளியிடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
மேலும், இரண்டாம் தலைமுறை அல்ட்ரா வைடுபேண்டு சிப்பையும் புதிய வாட்ச் சீரிஸ் 9ல் கொடுத்திருக்கிறது ஆப்பிள். இதன் மூலம், முந்தைய தலைமுறை அல்ட்ரா வைடுபேண்டு சிப்பை விட மூன்று மடங்கு தூரத்திற்கு துல்லியமாக நமது ஐபோனைக் கண்டறிய உதவும்.
2000 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சத்தைக் கொண்ட டிஸ்பிளேவைப் பெற்றிருக்கும் இந்த வாட்ச் சீரிஸ் 9ஐ 399 டாலர்கள் விலையில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மட்டுமின்றி, தங்களின் விலையுயர்ந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2வையும் இன்று வெளியிட்டது ஆப்பிள்.
ஆப்பிள்
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2:
வாட்ச் சீரிஸ் 9ல் வழங்கிய அனைத்து வசதிகளையும் வாட்ச் அல்ட்ரா 2விலும் வழங்கியிருக்கிறது ஆப்பிள். மேலும், சீரிஸ் 9ல் பயன்படுத்திய அதே S9 சிப்பையே அல்ட்ரா 2விலும் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
3000 நிட்ஸ் அதிபட்ச வெளிச்சத்தை வெளிப்படுத்தும் டிஸ்பிளேவை வாட்ச் அல்ட்ரா 2வில் கொடுத்திருக்கிறது ஆப்பிள். மேலும், இந்த வாட்ச் அல்ட்ரா 2வை 799 டாலர்கள் விலையில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
தங்களுடைய இந்தப் புதிய ஸ்மார்ட்வாட்ச்களை பூஜ்யம் கார்பன் உமிழ்வைக் கொண்ட தயாரிப்புகளாக அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்.
அதாவது, இந்தத் வாட்ச்களின் தயாரிப்பு செயல்முறைகளின் போது கார்பன் வெளியேற்றமே இல்லாத செயல்முறைகளையே மேற்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
ட்விட்டர் அஞ்சல்
ஆப்பிளின் புதிய ஸ்மார்ட்வாட்ச்:
This is Apple Watch Series 9 #AppleEvent pic.twitter.com/U67qBqmd80
— Apple Hub (@theapplehub) September 12, 2023