Page Loader
இதயத்தின் செயல்பாடைக் கண்காணிக்கும் புதிய உடல்நல பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய ஆப்பிள்
இதயத்தின் செயல்பாடைக் கண்காணிக்கும் புதிய உடல்நல பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய ஆப்பிள்

இதயத்தின் செயல்பாடைக் கண்காணிக்கும் புதிய உடல்நல பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய ஆப்பிள்

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 19, 2023
05:38 pm

செய்தி முன்னோட்டம்

தங்கள் ஸ்மார்ட் வாட்சில், Atrial Fibrillation (AFib) history என்ற புதிய உடல்நலத்தை கண்காணிக்க உதவும் புதிய வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் அனுமதி பெற்ற பிறகு, கடந்தாண்டு இந்தப் புதிய வசதியை தங்களது வாட்ச்OS 9-ன் முதன் முறையாக வழங்கியிருந்தது ஆப்பிள். தற்போது இந்த AFib history வசதியை, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மற்றும் அதற்கு பின்பு வெளியான மாடல்களில் பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இந்தப் புதிய வசதியானது சரியாகச் செயல்பட, ஆப்பிள் வாட்ச்சும், ஐபோனும் சமீபத்திய மென்பொருளில் இயங்குகிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்

AFib history வசதி எதற்காகப் பயன்படும்? 

ஆப்பிளின் இந்த புதிய AFib வசதியானது, இதயத்தின் சீரற்ற செயல்பாடைக் கண்காணிக்க பயன்படுத்தப்படுகிறது. இதயத்தின் மேல் அறைகளான ஏட்ரியா, சீரற்ற இதயத்துடிப்பை வெளிப்படுத்தி, ஏட்ரியாவில் இருந்து இதயத்தின் கீழ் அறைகளான வென்ட்ரிகிள்களுக்கு பாயும் ரத்தத்தின் அளவு சரியாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில், அதனைக் இந்தப் புதிய வசதியின் மூலம் கண்டறிய முடியும். மேற்கூறிய வகையில் சீரற்ற செயல்பாடை இதயம் கொண்டிருக்கும் பட்சத்தில், அது உயிரிழப்புக்கே கூட வழி வகுப்பதற்கான ஆபத்து இருக்கிறது. ஆப்பிளின் புதிய வசதியின் மூலம் இதனைக் கண்காணித்து, எப்போதெல்லாம் இது போன்ற சீரற்ற செயல்பாட்டை இதயம் வெளிப்படுத்துகிறது என்பதனைக் கண்டறிந்து உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறலாம்.