Page Loader
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செய்த புதிய சாதனை! கதிகலங்கிய சாம்சங்
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் படைத்த புதிய சாதனை

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செய்த புதிய சாதனை! கதிகலங்கிய சாம்சங்

எழுதியவர் Siranjeevi
Jan 24, 2023
10:32 am

செய்தி முன்னோட்டம்

ஐபோன் என்றால் பலருக்கும் பிடிக்கும். அதிலும் சமீபத்தில் வெளியான ஐபோன் 14 மாடல்கள் நல்ல விற்பனையில் உள்ளது. என்னதான் ஐபோன் விலை அதிகமாக இருந்தாலுமே அதன் தோற்றம் மற்றும் தரம், பயன்பாடுகள், அம்சங்கள் என பல வகையில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் நல்ல லாபத்தை ஈட்டும் ஆப்பிளின் ஐபோன் மாடல்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூ.8,100 கோடி மதிப்புள்ள ஐபோன்களை கடந்த டிசம்பரில் ஏற்றுமதி செய்து ஆப்பிள் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இதில் டிசம்பரில் இந்தியாவிலிருந்து சாதனையாக ரூ.10,000 கோடிக்கு மேல் செல்போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் விற்பனை

புதிய சாதனைக்குப் பிறகு ஆப்பிளின் அடுத்த இலக்கு

மேலும், இந்தியாவில் ஃபாக்ஸ்கான், விஸ்டரான், பெகட்ரான் ஆகியவை ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன்களை தயாரித்து வழங்கி வருகிறது. இதற்கு முன் சாம்சங் விற்பனையில் கலக்கி வந்தது., தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் இந்தியாவில் செல்போன்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால், நவம்பரில் ஆப்பிள் நிறுவனம் அதனை பின்னுக்கு தள்ளி டிசம்பரில் மட்டுமே 1 பில்லியன் டாலர் அதாவது ரூ.8,100 கோடி என்ற இலக்கை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஏற்றுமதி கடந்து புதிய சாதனையை படைத்து இருக்கிறது. அதேபோல், 2025 ஆம் ஆண்டில் உலக அளவில் மொத்தமுள்ள ஆப்பிள் ஐபோன்களில் 25 சதவீதத்தை இந்தியா தயாரித்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.