Page Loader
இந்தியாவின் உள்நாட்டு BharOS உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ்! முக்கிய அம்சங்கள்
ஐஐடி நிறுவனம் இந்தியாவில் உருவாக்கிய BharOS

இந்தியாவின் உள்நாட்டு BharOS உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ்! முக்கிய அம்சங்கள்

எழுதியவர் Siranjeevi
Jan 23, 2023
11:32 am

செய்தி முன்னோட்டம்

தன்னிறைவு இந்தியாவை உருவாக்கும் முயற்சியாக ஐஐடி மெட்ராஸ் ஜான்ட்கே ஆபரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உதவியுடன் நாட்டின் சிறந்த OS எனப்படும் மொபைல் இயக்க முறைமையை உருவாக்கியுள்ளது. டெவலப்பர்கள் இதற்கு 'BharOS' என்று பெயரிட்டுள்ளனர். இந்த OS நாட்டின் 100 கோடி மொபைல் ஃபோன் யூசர்களுக்கு பயனளிக்கும் என தெரிவிக்கின்றனர். இதன் முக்கிய அம்சமாக பயனர்களுக்கு சுதந்திரம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதன் மூலம் அவர்கள் தேவைக்கு ஏற்ற ஆப்ஸை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். தற்போது, பயன்பாட்டில் உள்ள OS-களை விட இதில் அதிக சுதந்திரம் வழங்கப்படுவதாக கூறுகின்றனர். எந்த வித ஆண்ட்ராய்டு போன்களிலுமே கூகுளின் ஆப்ஸ்கள் போன்களில் வழங்கப்பட்டு இருக்கும். ஆனால் BharOS இல் அது போன்ற எந்த இயல்புநிலை ஆப்ஸ்களும் அமைக்கப்படவில்லை.

ஐஐடி மெட்ராஸ்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட BharOS - இதன் முக்கியம் அம்சங்கள் என்னென்ன?

அதேப்போன்று, தனியார் ஆப் ஸ்டோர் சேவைகளில் (PASS) நம்பகமான பயன்பாடுகளுக்கான அணுகலையும் OS வழங்கும். இதனால், முழுமையாக சரிபார்க்கப்பட்ட நிறுவனங்களின் சில பாதுகாப்பு மற்றும் தனியுரிமை நிலைகளை பூர்த்தி செய்த ஆப்ஸ்களின் க்யூரேட்டட் பட்டியலுக்கு அணுகலை வழங்குகிறது. இதனைக்கொண்டு பயனர்கள் தாங்கள் நிறுவும் செயலிகள், பயன்படுத்த பாதுகாப்பானவை என்றும், பாதுகாப்பு சார்ந்த பாதிப்புகள் அல்லது தனியுரிமை மீறல்கள் உள்ளதா என்பதையும் சரிபார்க்க முடியும். மேலும், இந்த Bhar OS தானாகவே அப்டேட் ஆகிக்கொள்ளும். OTA மூலம் ஏதாவது அப்டேட் கிடைத்தால் தானாகவே download செய்து install ஆகிவிடும். இவை தனியுரிமை மற்றும் பாதுகாப்புத் தேவைகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே தற்போது BharOS வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற OS போலவே இதுவும் பயன்பாட்டிற்கு வரும்.