உணவகத்தில் கொள்ளையடித்த நபரைக் கண்டறிய உதவிய ஆப்பிள் ஏர்டேக்
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில், உணவகம் ஒன்றில் இருந்து திருடப்பட்ட பொருட்களை, திருடியவரையும் கண்டுபிடிக்க ஆப்பிளின் ஏர்டேக் (Apple Airtag) சாதனம் உதவியிருக்கிறது. பயனர்களின் பாதுகாப்பிற்காக அல்லது பயனர்கள் தங்களது பொருட்களை தொலைந்தால் கண்டறிவதற்கு வசதியாக ஏர்டேக் என்ற சிறிய ப்ளூடூத் உதவியுடன் இயங்கும் சாதனம் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது ஆப்பிள். தற்போது, சான் பிரான்சிஸ்ரோ நகரில், நான்கு உணவகங்களில் 20,000 டாலர்களுக்கு மேல் மதிப்புடைய பணம் மற்றும் பொருட்களை கொள்ளயடித்து சென்றிருக்கிறார் கொள்ளையர் ஒருவர். அவர் திருடிய பொருட்களுடன் ஆப்பிள் ஏர்டேக் சாதனம் ஒன்றும் இருக்கவே, அதன் உதவியுடன் எளிதான கொள்ளையரின் இடத்தைக் கண்டறிந்து, திருடப்பட்ட பொருட்களை அந்நாட்டு போலீசார் மீட்டிருக்கின்றனர்.
ஆபத்து காலங்களில் உதவும் ஏர்டேக்:
ஆப்பிள் ஏர்டேக் சானத்தைக் உதவியுடன் கொள்ளையர்களைக் கண்டறிவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு பல முறை இதே போல ஏர்டேக்கின் உதவியுடன் கொள்ளையர்களைப் போலீசார் கண்டறிந்திருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் கூட, ஆஸ்திரேலியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவரி இருப்பிடத்தைக் கண்டறிய உதவியிருக்கிறது ஏர்டேக் சாதனம். ஏர்டேக் சாதனத்தை தவறான வழியில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, அதற்கான சில வசதிகளையும் கூட கூடுதலாக வழங்கியிருக்கிறது ஆப்பிள். ஆப்பிள் ஏர்டேக்கின் செயல்பாடுகளைப் போலவே ஒத்த செயல்பாடுகளைக் கொண்ட குறைந்த விலை சாதனமான ஜியோடேக் (Jiotag) என்ற சாதனத்தை ஜியோ நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.