
AR ஹெட்செட் ஸ்டார்அப் நிறுவனமான மிராவை வாங்கிய ஆப்பிள்.. என்ன ஒப்பந்தம்?
செய்தி முன்னோட்டம்
AR ஹெட்செட்களை தயாரித்து வரும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான 'மிரா'வை (Mira) வாங்கியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
சில நாட்களுக்கு முன்பு தான் தங்களுைடய முதல் AR ஹெட்செட்டான விஷன் ப்ரோவை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் நிலையில், தற்போது இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மிராவை தாங்கள் வாங்கியிருப்பதை ஆப்பிள் நிறுவனமும் உறுதி செய்திருக்கிறது. தற்போது வரை 17 மில்லியன் டாலர்களை முதலீட்டை ஈர்த்திருக்கும் மிராவை எவ்வளவு மதிப்பிற்கு ஆப்பிள் வாங்கியிருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
"சிறிய தொழில்நுட்ப நிறுவனங்களை ஆப்பிள் கைப்பற்றுவது இது முதல் முறை அல்ல. இந்த நிறுவனத்தை வைத்து எந்த புதிய திட்டத்தையும் ஆப்பிள் வகுக்கவில்லை", என ஆப்பிள் ஊழியர்கள் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆப்பிள்
மிரா:
பிற நிறுவனங்களுக்கு AR ஹெட்செட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமே மிரா.
AR ஹெட்செட்களை தயாரிக்க அமெரிக்காவின் விமானப்படையுடனும், கப்பற்படையுடனும் மிரா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிட்டத்தக்கது.
அமெரிக்க ராணுவம் மட்டுமல்லாது, நிண்டண்டோ வேர்ல்டுடனும் AR ஹெட்செட்களை தயாரிப்பதற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறது மிரா.
ஆப்பிள் நிறுவனம் தற்போது மிராவை வாங்கியிருப்பதால் அமெரிக்க ராணுவத்துடனான அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் என்னவாகும் எனத் தெரியவில்லை என இந்த ஒப்பந்தத்திற்குத் தொடர்புடைய நபர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தைத் தொடர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
மிரா நிறுவனத்துடன் சேர்த்து அந்நிறுவனத்தின் சிஇஓ-வான பென் டாஃப்ட் உட்பட 11 ஊழியர்களையும் சேர்த்தை வாங்கியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.