LOADING...
ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது அவசர சேவைகளுடன் live வீடியோவை பகிரலாம்
இந்த ஸ்ட்ரீம் encrypt செய்யப்பட்டுள்ளது என்றும் பயனரால் எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம்

ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது அவசர சேவைகளுடன் live வீடியோவை பகிரலாம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 11, 2025
05:10 pm

செய்தி முன்னோட்டம்

கூகிள் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அவசர live வீடியோ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுமையான கருவி பயனர்கள் அழைப்பு அல்லது குறுஞ்செய்தி அனுப்பும்போது அவசரகால பதிலளிப்பவர்களுக்கு நிகழ்நேர வீடியோவை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. முதல் பதிலளிப்பவர்களுக்கு (First Responders) நிலைமையை பற்றிய உடனடி பார்வையை வழங்குவதும், அவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

செயல்பாடு

அவசர நேரலை வீடியோ எப்படி வேலை செய்கிறது?

அவசர அழைப்பு அல்லது குறுஞ்செய்தி அனுப்பும்போது பயனரின் தொலைபேசிக்கு அனுப்புநரிடமிருந்து கோரிக்கையை அனுப்புவதன் மூலம் Emergency Live Video வசதி செயல்படுகிறது. பயனர் ஒப்புக்கொண்டால், அவர்கள் ஒரே ஒரு click-கினால் தங்கள் தொலைபேசியின் கேமராவிலிருந்து நேரடி வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்ய தொடங்கலாம். இந்த ஸ்ட்ரீம் encrypt செய்யப்பட்டுள்ளது என்றும் பயனரால் எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என்றும் நிறுவனம் கூறுகிறது.

கிடைக்கும் தன்மை

கிடைக்கும் தன்மை விவரங்கள்

இந்தப் புதிய அம்சம், அமெரிக்காவில், ஜெர்மனி மற்றும் மெக்சிகோவின் சில பகுதிகளில், பதிப்பு 8 அல்லது அதற்கு மேற்பட்ட (Google Play சேவைகளுடன்) இயங்கும் Android சாதனங்களில் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இந்த சேவையை உலகளவில் விரிவுபடுத்த Google திட்டமிட்டுள்ளது. உங்கள் தொலைபேசியின் அவசர கருவித்தொகுப்பை மேம்படுத்த, அவசரகால நேரடி வீடியோ, அவசர இருப்பிட சேவை, கார் விபத்து கண்டறிதல், வீழ்ச்சி கண்டறிதல் மற்றும் செயற்கைக்கோள் SOS போன்ற பிற பாதுகாப்பு வசதிகளுடன் இணைந்து செயல்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

Advertisement