Page Loader
வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயனாளர்களுக்கு 'பாஸ்கீ' வசதியை அறிமுகப்படுத்தியது அமேசான்
வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயனாளர்களுக்கு 'பாஸ்கீ' வசதியை அறிமுகப்படுத்திய அமேசான்

வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயனாளர்களுக்கு 'பாஸ்கீ' வசதியை அறிமுகப்படுத்தியது அமேசான்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 24, 2023
12:53 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, அமேசான் நிறுவனமும் பயனாளர்களுக்கு 'பாஸ்கீ' (Passkey) வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பாஸ்வேர்டுக்கு மாற்றாக, பாஸ்கீயை மாற்றாக அறிமுகப்படுத்தி வருகின்றன டெக் நிறுவனங்கள். பாஸ்வேர்டுகளைப் போல அல்லாமல் பாஸ்கீகளானது கூடுதல் பாதுகாப்பையும், பயனாளர்கள் பாஸ்வேர்டுகளை மறக்கும் பிரச்சினைக்கான தீர்வாகவும் அமையும் எனத் தெரிவித்துள்ளனர். பாஸ்கீ என்றால் என்ன? நம்முடைய ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய ஒரு ஃபிங்கர்பிரண்டையோ, ஃபேஸ் அன்லாக்கையோ அல்லது பின் நம்பரையோ பயன்படுத்துவோம். அதனையே நமது மற்ற கணக்குகளுக்கும் பயன்படுத்துவதையே பாஸ்கீ எனக் குறிப்பிடுகின்றனர்.

அமேசான்

பாஸ்கீயை முன்னிலைப்படுத்தும் டெக் நிறுவனங்கள்: 

ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் பாஸ்வேர்டுகளுக்கு மாற்றாக இந்த பாஸ்கீக்களையே தற்போது முன்னிலைப்படுத்தி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் பாஸ்கீ வசதியை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அமேசான் நிறுவனமும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அமேசான் சேவையில் பாஸ்கீ வசதியைப் பயன்படுத்த 'Your Accounts' பகுதியில் 'Login & Security'-யின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் பாஸ்கீ தேர்வை தேர்வு செய்து அதனை செட் செய்து பயன்படுத்தலாம். தற்போது இந்த வசதியை ப்ரௌசர் மற்றும் IOS பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான். விரைவில் இந்த பாஸ்கீ வசதியை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.