மனிதர்களின் வாழ்நாளை கணிக்கும் AI-யை வடிவமைத்த டென்மார்க் ஆராயச்சியாளர்கள்
செய்தி முன்னோட்டம்
Technical University of Denmark கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களின் வாழ்நாளை துல்லியமாகக் கணிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியிருக்கிறார்கள்.
மேலும், தாங்கள் உருவாக்கிய இந்த மென்பொருளானது, அதில் கொடுக்கப்படும் தகவல்களை வைத்து, குறிப்பிட்ட ஒரு நபரின் வாழ்நாளை கணிப்பதாகவும், அந்த கணிப்பு 78% வரை துல்லியமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
சாட்ஜிபிடியை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாடலுக்கு Life2vec எனவும் பெயரிட்டிருக்கிறார்கள் டென்மார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
ஒரு மொழியில் எப்படி ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்பும் குறிப்பிட்ட வார்த்தை தான் வரும் என்ற கோர்வை இருக்கிறதோ, அதே போலவே மனிதர்களின் வாழ்க்கையும் அமைந்திருப்பதாக தன்னுடைய கருத்ததைத் தெரிவித்திருக்கிறார் அந்த AI மென்பொருளை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்களுள் ஒருவர்.
செயற்கை நுண்ணறிவு
வாழ்நாளை கணிக்கும் AI:
ஒரு நபரின் வாழ்நாளைக் கணிக்க, அவரது உடல்நிலை, கல்வி, தொழில் மற்றும் வருவாய் ஆகிய தகவல்களை ஆராய்ந்து, அதன் பின்பே தனது கணிப்பை வழங்குகிறது இந்தப் புதிய AI.
இந்த AI மென்பொருளை பழக்குவதற்காக, 2008 முதல் 2020 வரையிலான டென்மார்க் மக்களின் உடல்நல மற்றும் தொழிலாளர் சந்தைத் தகவல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த வகையில் சுமார் 60 லட்சம் மக்களின் தகவல்களை ஆராய்ந்திருக்கிறது இந்த AI. வாழ்நாள் மட்டுமின்றி, தொழில் வெற்றி மற்றும் பல்வேறு இதர விஷயங்களையும் கணிக்கும் வகையில் இந்த AI வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒருவரின் கடந்த காலத்தை வைத்து, எதிர்காலத்தை காண்ணாடியைப் போல இந்த AI பிரதிபலிக்க முயல்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார் ஆராய்ச்சியாளர் ஒருவர்.