Page Loader
AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர்! வைரல் வீடியோ
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி செய்தி வாசிப்பாளாரை அறிமுகப்படுத்திய ஊடகம்

AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர்! வைரல் வீடியோ

எழுதியவர் Siranjeevi
Apr 11, 2023
11:27 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு ஆனது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனைப்பயன்படுத்தி பல நிறுவனங்கள் பல வேலைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், குவைத்தில் ஊடகம் ஒன்று செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மெய்நிகர் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் தோன்றிய பெண், 'நான் ஃபெதா. நீங்கள் எந்த வகையான செய்திகளை விரும்புகிறீர்கள்? உங்கள் கருத்துக்களைக் கேட்கத் தயார்', என்று கிளாசிக்கல் அரபு மொழியில் கூறுகிறார். மேலும், வளைகுடா பிராந்தியத்தின் முதல் ஆங்கில மொழி நாளிதழாக 1961 இல் நிறுவப்பட்ட குவைத் டைம்ஸுடன் இந்த தளம் இணைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய தலைமை ஆசிரியர் அப்துல்லா போஃப்டைன், Fedha குவைத் உச்சரிப்பை ஏற்று, 1.2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட தளத்தின் ட்விட்டர் கணக்கில் செய்திகளை வழங்குவார் எனக்கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post